கமகம வாசத்துடன் ருசியான நாஞ்சில் மீன் குழம்பு இப்படி செஞ்சி பாருங்க! ஒரு தட்டு சோறும் காலியாகும்!

Summary: கோழிக்கறி,ஆட்டுக்கறி, முட்டை இதுபோன்ற உணவுகளை விட மீனில் இருக்கும் சக்தி தான் உடலுக்கு தேவையானஆற்றலை அதிகரிக்கிறது. இவ்வாறான ஊட்டச்சத்து நிறைந்த மீனை வைத்து செய்யக்கூடிய மீன்குழம்பை ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமான சுவையில் செய்கின்றனர். ஆனால் சரியான பக்குவத்தில்நம் நாஞ்சில் ஊரில் செய்தது போன்ற சுவையில் பலராலும் செய்ய முடிவதில்லை. அவ்வாறு பாட்டியின்கை பக்குவத்தில் வைக்கக் கூடிய சுவையான மீன் குழம்பை எவ்வாறு செய்வது என்பதை பற்றிதான்இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Ingredients:

  • 1/4 கிலோ மீன்
  • 1 புளி
  • உப்பு
  • 2 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 5 ஸ்பூன் தேங்காய் துருவல்
  • பெரிய வெங்காயம்
  • 3 ஸ்பூன் தனியா தூள்
  • 1 ஸ்பூன் சீரகப் பொடி
  • 1 ஸ்பூன் மிளகு
  • கறிவேப்பிலை
  • 1 ஸ்பூன் எண்ணெய்
  • 1/4 ஸ்பூன் வெந்தயம்
  • 5 காய்ந்த மிளகாய்
  • 2 பச்சைமிளகாய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. மீன் துண்டுகளை நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். பச்சைமிளகாயை நீளவாக்கில் இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். புளியை ஊறவைத்து கரைத்து கொள்ளவும்.
  2. அதனுடன் ஒரு நெட்டு கறிவேப்பிலை, நறுக்கியப் பச்சைமிளகாய் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும் பெரிய வெங்காயத்தை சிறுத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  3. வாணலியைஅடுப்பில் வைத்து அரை மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் தேங்காய் துருவல்,வெங்காயம், மல்லி, காய்ந்த மிளகாய், மிளகு, பெருஞ்சீரகம் மற்றும் இரண்டு நெட்டு கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
  4. தேங்காய் துருவல் நன்கு பொன்னிறமாக பொலபொலவென்று ஆகும் வரை வறுக்க வேண்டும்.வறுத்தப் பொருட்களை ஐந்து நிமிடங்கள் ஆற வைக்கவும். பிறகுமிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்கு பொடித்துக்" கொள்ளவும்.
  5. அதில் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு மைப் போல் மீண்டும் அரைத்துக் கொள்ளவும். ஏற்கனவே கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலுடன் இந்த விழுதை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு நன்கு குழம்பு போல் கலக்கி வைத்துக் கொள்ளவும்.
  6. வாணலியைஅடுப்பில் வைத்து அரை மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயத்தை போட்டு தாளிக்கவும், வெந்தயம் பொன்னிறமானதும் கரைத்து வைத்துள்ள குழம்புக் கலவையை ஊற்றவும்.குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும் சுத்தம் செய்த் மீன் துண்டுகளை சேர்க்கவும். குழம்பு பாத்திரத்தை மூடி வைக்கும் பொழுது மூடியை சிறிது திறந்திருக்குமாறு வைத்து பத்து நிமிடங்கள் மிதமான தீயில் வேக விடவும் மணமணக்கும்.
  7. நாவூறும் சுவையான நாஞ்சில் மீன் குழம்பு தயார். இந்த குழம்பை சூடாக்கி இரண்டு நாட்கள் வைத்திருந்து சாப்பிடலாம்.