கத்திரிக்காயில் சாப்ஸ் இப்படி கூட செய்யலாமா? சுவையில் சிக்கன் வறுவல் தோத்து போகும் ட்ரை பன்னி பாருங்க!

Summary: பெரும்பாலும் கத்திரிக்காயை எப்படி சமைத்துக் கொடுத்தாலும் வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட மாட்டார்கள்.ஆனால் இது உடம்புக்கு கொஞ்சம் ஆரோக்கியம் தரக்கூடிய காய் ,ஒதுக்கி வைக்க வேண்டாம்.வெரைட்டி ரைஸுக்கு சைடிஷ் ஆக, கத்திரிக்காய்களை இப்படி கத்திரிக்காய் சாப்ஸ் கொடுத்துபாருங்கள். கத்திரிக்காயை பிடிக்காது என்று சொல்லுபவர்கள் கூட, இதை விரும்பி விரும்பிசாப்பிட்டு விடுவார்கள். ரொம்ப ரொம்ப ஈஸியா கத்திரிக்காய் சாப்ஸ் எப்படி செய்வது. பதிவைதொடர்ந்து படியுங்கள்.

Ingredients:

  • 1/4 கிலோ கத்தரிக்காய்
  • 1 ஸ்பூன் கடலை மாவு
  • 1/2 ஸ்பூன் கார்ன்ஃப்ளார்
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு
  • எண்ணெய்
  • 2 ஸ்பூன் மிளகு
  • 1/2 ஸ்பூன் சோம்பு
  • 1 பட்டை
  • 1 ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. கத்திரிக்காயை வட்ட வட்டமாக , கனமான துண்டுகளாக நறுக்குங்கள்.
  2. அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்கு அரைத்தெடுங்கள்.
  3. கத்திரிக்காயை மஞ்சள்தூள் சேர்த்து கிளறவும்.
  4. அரைத்த மசாலா,கார்ன்ஃப்ளார், கடலைமாவு, உப்பு சேர்த்துப் பிசறி, எண்ணெயில் பொரித்தெடுங்கள்.
  5. பிரமாதமாக இருக்கும் இந்த கத்திரிக்காய் சாப்ஸ்.