ஒரு கப் கோதுமை மாவு இருந்தால் குஜராத் தேப்லா ரெசிபி ரெடி! ஒன்னு கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவாங்க!

Summary: தேப்லா ஒரு குஜராத்தி உணவு பெரும்பாலும் பல தானியங்களைச் அரைத்து சேர்த்த மாவில் தயாரிக்கப்படுகிறது.பொதுவாக முழு கோதுமை மாவுடன் கொண்டைக்கடலை மற்றும் தினை மாவு சேர்த்து தயாரிக்கப்படுகிறது.பயணத்திற்காக தயாரிக்கப்படும் போது, தேப்லாவிற்கான மாவில் தண்ணீருக்குப் பதிலாக பால்மற்றும் கூடுதல் நெய்/எண்ணெய் சேர்த்து கெட்டியாக திரட்டப்படுகிறது. இவ்வாறு தேப்லாசெய்வதால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் பாதுகாக்க முடியும்.. வீட்டில் தாய்மார்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலையே குழந்தைகளை சாப்பிட வைப்பது தான். அதிலும்பள்ளிக்கு செல்லும் போது காலையில் சாப்பிட வைத்து மதியம் சாப்பாட்டை மிச்சம் வைக்காமல்சாப்பிட வைக்க பெரும்பாடு பட வேண்டும். என்ன தான் அவர்களுக்கு பிடித்த மாதிரி செய்துகொடுத்தாலும் கூட மிச்சம் வைத்து விடுவார்கள். இந்த டென்ஷனை குறைக்க இந்த தேப்லா ரெசிபியைதெரிஞ்சு வச்சுக்கிட்டீங்கன்னா இனி உங்க குழந்தைங்க கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம சாப்பிடறஒரு அருமையான ரெசிபியை தயார் பண்ணலாம் வாங்க அதை எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

Ingredients:

  • 2 cup கோதுமை
  • 1 spoon நெய்
  • 1 spoon உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. மூன்றையும் ஒன்றாகக் கலந்து, தேவையான தண்ணீர் சேர்த்து மெத்தென்று பிசையுங்கள்
  2. பிறகு, மெல்லிய சப்பாத்திகளாகத் திரட்டி, தோசைக்கல்லில் போட்டு சுட்டெடுங்கள். பூரியை விடசற்று பெரிய சப்பாத்திகளாக, மெல்லியதாக திரட்டுங்கள்.
  3. தோசைக்கல்லைக் காயவைத்து, திரட்டிய சப்பாத்தியை போட்டு இரு புறமும் திருப்பிவிட்டு, அது உப்பும்போதுசற்று கனமான துணியைக் கொண்டு லேசாக அழுத்திவிடுங்கள்.
  4. அதனுள் இருக்கும்காற்று, மற்ற இடங்களுக்குப் பரவி பூரி போல் வரும். எழும்பி
  5. மறுபுறம் திருப்பிவிட்டு, மீண்டும் லேசாக துணியால் அழுத்திவிட்டு எடுத்து, சிறிதளவு நெய் தடவிவையுங்கள்." மிக மிருதுவாகவும்சுவையாகவும் இருக்கும் இந்த சப்பாத்தி.
  6. 'குஜராத்தில் பிரபலமானது இந்த தேப்லா. மிக மிருதுவாக இருக்கும்."