மாலை நேரம் குடிக்க ருசியான பொன்னாங்கன்னி கீரை சூப் இப்படி ஒரு தரம் செய்து பாருங்க!

Summary: விதவிதமான சூப் வகைகளில் சத்து நிறைந்துள்ள இந்த பொன்னாங்கண்ணி ரொம்பவே சக்தி உள்ளதாக கருதப்படுகிறது.கீரைகளின் சிறந்த பொன்னாங்கண்ணி கீரை சூப் செய்து குடித்தால் உடலில் ரத்த சோகை நோய்இருப்பவர்களுக்கு ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து ரத்த சோகை நோய் தீரக்கூடியசுலபமான வழியாக இருக்கும். மேலும் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கவும், அடிக்கடிமயக்கம் ஏற்படாமல் இருக்கவும், உடல் நல்ல வலுடன் மாறவும் இந்த பொன்னாங்கண்ணி சூப்பைஅடிக்கடி செய்து சாப்பிடலாம். சுவையான பொன்னாங்கண்ணி சூப் எப்படி வீட்டில் செய்வது?என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் இனி பார்க்க இருக்கிறோம்.

Ingredients:

  • பொன்னாங்கண்ணி
  • தனியாதூள்
  • உப்பு
  • இஞ்சி

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. இஞ்சியைக் கழுவி, தோல்சீவி துருவிக் கொள்ளவும்.மிளகை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும்.இரண்டு கீரைகளையும் அலசி எடுத்துக்கொள்ளவும்.
  2. ஒரு டம்ளர் தண்ணீரில், துருவிய இஞ்சி, உப்பு, மிளகு ஆகியவற்றைப் போட்டு கொதிக்கவிடவும்.கொதிக்கும்போது கீரைகளைப் போட்டுவிட்டு, அடுப்பை அணைத்துவிடவும்.
  3. 2 நிமிடம் மூடிவைத்து விட்டால், கீரைகளின் சாறு கொதிநீரில் இறங்கிவிடும் வடிகட்டிவிட்டு அந்த சூப்பை பருகலாம்.
  4. பயன்:கண்கள் பிரகாசமாகவும், 'பளிச்'சென்று கண்களை எடுத்துக் காட்டவும் இந்த சூப்பைப் பருகலாம்.
  5. கூந்தல் வளர்ச்சிக்கும் இந்த சூப் உதவி செய்யும்