இனிப்பு, புளிப்பு மற்றும் கார சுவையுடன் கூடிய மாங்காய் பச்சடி செய்வது எப்படி ?

Summary: பெரும்பாலானோர் தங்கள் குழந்தைகளுக்கு காலை இரவு உணவாக அதிகபட்சம் கொடுக்கும் உணவே பால் சாதம் அல்லது தயிர் சாதம் தான். இது போன்ற உணவுகளை கொடுக்கும்போது பெரும்பாலும் ஊறுகாய் தான் பலர் இன்றும் பரிமாறுகிறார்கள். ஆனால் குழந்தைகளுக்கு பொதுவாக ஊறுகாய் சாப்பிடுவதில் பெரிதும் விருப்பம் இருக்காது நீங்கள் அதற்கு பதிலாக இனிப்பு மற்றும் கார சுவையுடன் கூடிய இந்த மாங்காய் பச்சடியை செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஏன் இந்த பச்சடியை வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இதை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் பின் குழந்தைகள் இதை அடிக்கடி செய்து தரச் சொல்லி உங்களிடம் கேட்க ஆரம்பித்து விடுவார்கள் அந்த அளவிற்கு இந்த மாங்காய் பச்சடி அட்டகாசமான சுவையில் இருக்கும்.

Ingredients:

  • 2 tbsp நல்லெண்ணெய்
  • 1 tbsp கடுகு உளுந்த பருப்பு
  • 2 வர மிளகாய்
  • 2 பச்சை மிளகாய்
  • 2 மங்காய்
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • 1 tbsp மிளகாய் தூள்
  • 1 tbsp உப்பு
  • ¼ tbsp பெருங்காய தூள்
  • ½ டம்பளர் தண்ணீர்
  • 100 கிராம் துருவிய வெல்லம்
  • 1 கப் தண்ணீர்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 டீ பாத்திரம்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் நாம் எடுத்து கொண்ட இரண்டு மாங்காய்களை தண்ணீரில் கழுவி நன்கு சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு மாங்காய் கொட்டை பகுதிகளை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். அதன் பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டீஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றவும்.
  2. பின் எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதனுடன் ஒரு டீஸ்பூன் அளவு கடுகு உளுந்தம் பருப்பு சேர்த்துக் கொள்ளவும். பின் கடுகு நன்கு பொரிந்து வந்தவுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய் மற்றும் வரமிளகாய் சேர்த்து நன்கு தாளித்துக் கொள்ளவும்.
  3. பின்பு இதனுடன் நம் சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் மாங்காயை சேர்த்து நன்கு கிளறி விடுங்கள். பின் மாங்காய் மஞ்சள் நிறமாக மாறத் தொடங்கியதும், நாம் வைத்திருக்கும் மஞ்சள் பொடி, மிளகாய் தூள் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள்.
  4. பின்பு இதனுடன் ஒரு டீஸ்பூன் அளவு உப்பு மற்றும் அரை டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி கிளறிவிட்டு கடாயை மூடி விடுங்கள். பின்பு மற்றொரு அடுப்பில் ஒரு டீ பாத்திரத்தை வைத்து அதில் துருவி வெள்ளத்தை சேர்த்து ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்து வெல்ல பாகு தயார் செய்து கொள்ளுங்கள்.
  5. வெல்லம் உருகி ஒருமுறை கொதித்து வந்தால் போதுமானதாக இருக்கும் பின்பு கடாயைத் திறந்து நாம் தயார் செய்த வெல்ல பாகுவை மாங்காயுடன் ஊற்றி நன்கு கிளறி விடுங்கள்.
  6. பின் மாங்காயுடன் நாம் ஊற்றிய வெல்லப்பாகு கெட்டியான பதத்திற்கு வரும் வரை வேக வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் இனிப்பு, புளிப்பு மற்றும் கார சுவையுடன் கூடிய மாங்காய் பச்சடி இனிதே தயாராகிவிட்டது.