மோர் வடை குழம்பு ஒரு முறை இப்படி வைத்து பாருங்கள்! சுட சுட சோறுடன் சாப்பிட ருசியாக இருக்கும்!

Summary: மோர்க் குழம்பில் பலவகை உண்டு. ஒவ்வொருவர் வீட்டிலும், அவரவர் வீட்டு வழக்கப்படி மோர்குழம்பு வைப்பார்கள். இப்போது நாம் தெரிந்துகொள்ள போகும் இந்த மோர் குழம்பு கொஞ்சம் வித்தியாசமானது. காய் சேர்க்காமல், சுலபமான முறையில் மோர் வடை குழம்பு எப்படி வைப்பது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மோர் வடை குழம்பு கொஞ்சம் வித்தியாசமானது காய் சேர்க்காமல், சுலபமான முறையில் மோர் வடை குழம்பு எப்படி வைப்பது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Ingredients:

  • 1/4 கப் உளுத்தம்பருப்பு
  • 3 டீஸ்பூன் பச்சரிசி
  • 3 டீஸ்பூன் துவரம் பருப்பு
  • 2 பச்சை மிளகாய்
  • 2 கப் தயிர்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு
  • எண்ணெய்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 டீஸ்பூன் உளுந்து
  • 1/2 டீஸ்பூன் கடலை பருப்பு
  • 1 கொத்து கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Steps:

  1. உளுத்தம்பருப்பினைஊற வைத்து, உப்பு சேர்த்து கெட்டியாக (வடை மாவு பதத்தில்) அரைக்கவும்.
  2. பச்சரிசியும்,துவரம் பருப்பும் தண்ணீர் வீட்டு ஊற வைத்து, பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக அரைக்கவும்.1 கப் தயிரில் தண்ணீர் சேர்த்து அடித்து மோர் ஆக்கவும்.
  3. பாத்திரத்தில்எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு போட்டு தாளிக்கவும். இதில் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  4. இத்துடன்,அரைத்த மசாலா, மோர், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.அரைத்த உளுந்து மாவை வடை போல் தட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். மோர் குழம்பு கொதித்ததும் ஆற விடவும்.