மதிய உணவுக்கு சுட சுட கொத்தமல்லி சாதம் மஇனி இப்படி ட்ரை பன்னி பாருங்க! மிஸ் பன்னிடாதீங்க!

Summary: தினமும் குழம்பு, சாதம், சாம்பார், ரசம் என்று ஒரே மாதிரி சாப்பிடுவதை விட கொஞ்சம் வித்தியாசமாக சமைத்து தான் பார்ப்போமே. கொத்தமல்லி வைத்து கொத்தமல்லி சாதம் ரொம்ப ரொம்ப சுலபமா , வெந்த சாதம் வைத்து செய்வது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த கொத்தமல்லி சாதம் செஞ்சிட்டு சைடிஷா ஒரு நல்ல கிரேவியை வச்சுக்கலாம். நம்ம இஷ்டம் தான். மஸ்ரூம் கிரேவி, சிக்கன் கிரேவி, பன்னீர் கிரேவி, மட்டன் கிரேவி, வெஜிடபிள் குருமா, எதனுடன் வேண்டுமென்றாலும் இந்த கொத்தமல்லி சாதம் சாப்பிடலாம்.குறைந்த பொருட்களை வைத்து சட்டென வெறும் 10 நிமிடத்தில் மணக்க மணக்க கொத்தமல்லி சாதம் எப்படி செய்வது என்பதைப்பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Ingredients:

  • 1 கட்டு கொத்த மல்லி
  • 1 கப் வேகவைத்து வடித்த சாதம்
  • 3 பச்சை மிளகாய்
  • 2 பற்கள் பூண்டு
  • 1 சிறிய துண்டு இஞ்சி
  • 1 தே.கரண்டி ந.எண்ணெய்
  • 1/2 தே.கரண்டி கடுகு
  • 1/2 தே.கரண்டி சீரகம்
  • 1/2 தே.கரண்டி கடலை பருப்பு
  • 1/2 தே.கரண்டி உளுந்து
  • பெ.வெங்காயம்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் கொத்தமல்லி இலை,பச்சை மிளகாய்,இஞ்சி மற்றும் பூண்டு பற்களை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அடித்து கொள்ளவும்
  2. ஒரு வாணலியில் 1 தே.கரண்டி ந.எண்ணெய் விட்டு எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கடுகு,சீரகம்,உளுந்து,கடலை பருப்பு சேர்த்து வதக்கவும்
  3. கடுகு வெடித்ததும் நறுக்கிய பாதி பெ.வெங்காயத்தை இதனுடன்சேர்த்து நன்கு வதக்கவும்
  4. வெங்காயம் நன்கு வதங்கியதும் நாம் அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி கலவையை இதனுடன் சேர்த்து நன்கு கிளறவும்
  5. பிறகு நாம் எடுத்து வைத்துள்ள வேக வைத்த சாதத்தினை இதனுடன் சேர்த்து கிளறி இறக்கவும்