அடுத்தமுறை பீர்க்கங்காய் வாங்கினால் இது போல பீர்க்கங்காய் பிரட்டல் செய்து பாருங்க ஒரு சட்டி சோறும் காலியாகும்!

Summary: நீர் சத்துள்ள காய்கறிகளை அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டும். உடலில் நீர் சத்து குறையும் பொழுது அதை ஈடு செய்யும் வகையில் இது துணையாகஇருக்கும். அந்த வகையில் நீர்ச்சத்து நிறைந்துள்ள பீர்க்கங்காயில் ஏராளமான நன்மைகள்ஒளிந்து கொண்டுள்ளன. குறிப்பாக சருமத்தை பளபளக்க செய்வதில் இதன் பங்கு அதிகம். மேலும்எடை இழப்பு, ரத்த சோகை ரத்த சர்க்கரை அளவு, நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றுக்கு நல்லஒரு காய்கறியாக இருக்கிறது. அப்படிப்பட்ட இந்த பீர்க்கங்காயில்  10 நிமிடத்தில் பீர்க்கங்காய் பிரட்டல் செய்யலாம். சப்பாத்தி பூரி இதுக்கெல்லாம் எப்போதும் ஓரேமாதிரி செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமாக பீர்க்கங்காயை வைத்து ஒரு அருமையான பீர்க்கங்காய்பிரட்டல் ,இந்த முறையில் செய்து கொடுத்துப் பாருங்கள். இந்தக் காயில் கூட இவ்வளவு சுவையாகசெய்ய முடியுமா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு சுவை அட்டகாசம் ஆக இருக்கும். சுவையானபீர்க்கங்காய் பிரட்டல் ரெசிபியை அஞ்சே நிமிஷத்துல எப்படி வைப்பது? என்பதை இந்த பதிவின்மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

Ingredients:

  • 1 பீர்க்கங்காய்
  • 3 மேசைக்கரண்டி வேர்க்கடலை
  • 2 மிளகாய் வற்றல்
  • உப்பு
  • மஞ்சள் தூள்
  • கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு
  • கறிவேப்பிலை
  • 2 தேக்கரண்டி எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. பீர்க்கங்காயைத் தோல் நீக்கி நறுக்கி வைக்கவும்.வெறும் கடாயில் வேர்க்கடலையையும், மிளகாய் வற்றலையும் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  2. வேர்க்கடலையின் தோலை நீக்கிவிட்டு, மிளகாய் வற்றலுடன் சேர்த்து பொடி செய்து கொள்ளவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும்.
  3. அதனுடன் பீர்க்கங்காயைச் சேர்த்து மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு பிரட்டி சிறிது நீர் விட்டு மூடி வேகவிடவும்
  4. காய்வெந்ததும் வேர்க்கடலைப் பொடி சேர்த்து பிரட்டி இறக்கவும்.
  5. கூட்டுபதத்தில் வேண்டுமென விரும்பினால் மேலும் சிறிது நீர் சேர்க்கவும். .ட்ரையாக வேண்டுமெனில் நீர் சேர்க்கத் தேவையில்லை.
  6. சுவையானபீர்க்கங்காய் வேர்க்கடலை பிரட்டல் தயார்.