இட்லிக்கு தோசைக்கு ஏற்ற சுவையான இட்லி பொடி செய்வது எப்படி ?

Summary: இட்லி பொடி எடுத்து அதனுடன் சிறிதளவு எண்ணெய் கலந்து தொட்டு சாப்பிடும் சுவை எப்பொழுதும் கிடைக்காது. அந்த அளவிற்கு இட்லி பொடி வைத்து சாப்பிடுவது பலருக்கு பிடித்தமானதாக இருக்கும். ஏன் குழந்தைகளுக்கு கூட பலருக்கும் இட்லி தோசைக்கு இட்லி பொடி வைத்து தான் சாப்பிடுவார்கள். அப்படி சுவையான இட்லி பொடியை பெரும்பாலும் கடைகளில் விற்பனையாகும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட இட்லி பொடியை வாங்கி பயன்படுத்துவது நல்லதாக இருக்காது. ஏனென்றால் அவர்கள் பதப்படுத்துவதற்காக சில ரசாயன பொருட்களை சேர்த்து செய்வார்கள். ஆனால் நீங்கள் எளிமையான முறையில் வீட்டில் எப்படி இட்லி பொடி செய்வது என்று கவலைப்படாதீர்கள் இன்று நாம் அதைப் பற்றி தான் பார்க்க போகிறோம்.

Ingredients:

  • ½ கப் கடலை பருப்பு
  • 5 tbsp நல்லெண்ணெய்
  • ¼ கப் உளுந்த பருப்பு
  • ¼ கப் வேர்கடலை
  • ¼ கப் பொட்டுகடலை
  • 10 வர மிளகாய்
  • 10 காஷ்மீர் மிளகாய்
  • 1 கப் துருவிய தேங்காய்
  • 8 பல் பூண்டு
  • 2 துண்டு புளி
  • 1 ½ tbsp கல் உப்பு
  • ½ tbsp பெருங்காய தூள்
  • ½ tbsp சர்க்கரை

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 2 தட்டு

Steps:

  1. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து தீயே மிதமாக எரிய விட்டு பின் கடாயில் ஒரு டீஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அதனுடன் அரை கப் அளவு கடலை பருப்பு மற்றும் கால் கப் அளவு உளுந்தம் பருப்பு சேர்த்து நன்றாக சிவக்கும் வரை ஒரு இரண்டு நிமிடங்கள் வறுத்துக் கொள்ளவும்.
  2. பின்பு இதனுடன் ஒரு கால் கப் வேர்க்கடலை சேர்த்து வறுத்துக் கொள்ளவும், பின் ஒரு நிமிடம் கழித்து இதனுடன் ஒரு கால் கப் பொட்டுக்கடலையும் சேர்த்து நன்றாக வறுத்து அனைத்து பொருட்களையும் ஒரு தட்டில் தனியாக தட்டிக் கொள்ளவும்.
  3. பின்பு மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து ஒரு டீஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றி அதனுடன் 10 வரமிளகாய் மற்றும் 10 காஷ்மீர் மிளகாய் சேர்த்து மிளகாய் கருகாமல் வறுத்துக் கொள்ளுங்கள். மிளகாய் நன்கு வறுபட்டதும், இதை தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.
  4. பின் கடாயில் மீண்டும் ஒரு டீஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றி அதில் ஒரு கப் துருவிய தேங்காய், எட்டு பல் பூண்டு மற்றும் இரண்டு துண்டு புளி சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளுங்கள், தேங்காய் நன்கு வறுபட்டு பொன்னிறமாக வந்தவுடன் தேங்காயும் தனியாக ஒரு தட்டில் வைத்து கொள்ளுங்கள்.
  5. பின் அனைத்து பொருட்களையும் நன்றாக குளிர வைத்து முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் நாம் வறுத்த காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு பொடியாக்கி கொள்ளுங்கள். பின்பு இதனுடன் நம் முதலில் வறுத்த பருப்பு வகைகளை முதலில் பாதி சேர்த்து அரைத்துக் கொண்டு பின்பு மீதி பாதையை சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள்.
  6. பின் மிக்ஸி ஜாரில் ஒன்றை டீஸ்பூன் அளவு கல் உப்பு, அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் சர்க்கரையும் சேர்த்து இதனுடன் நாம் வறுத்த தேங்காயும் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் இட்லிக்கு ஏற்ற சுவையான இட்லி பொடி தயாராகி விட்டது