ருசியான கிராமத்து ஸ்டைல் வாழைப்பூ பருப்பு உசிலி கூட்டு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

Summary: வாழைப்பூ கிராமங்களில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. நகர்புறங்களில் இதை சுத்தம் செய்வதற்கு அதிக நேரம் ஆவதால் யாரும் இதை வாங்க விரும்புவதில்லை. ஆனால் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை சுத்தம் பன்ன உதவுகிறது. வாழைப்பூ பருப்பு உசிலி என்பது தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவாகும். தமிழ் பிராமணர்களின் குடும்பங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வாழைப்பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. அது மிகவும் ஆரோக்கியமானது. பருப்பு உசிலி என்பது தமிழ்நாட்டின் உன்னதமான மற்றும் பாரம்பரியமான செய்முறையாகும். இது வத்தல் குழம்பு அல்லது மோர் குழம்பு ஆகியவற்றுடன் நன்றாக இணைகிறது .

Ingredients:

  • 1 வாழைப்பூ
  • 1/2 கப் துவரம்
  • 1/2 கப் கடலை பருப்பு
  • 7 வர மிளகாய்
  • 1 டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/4 டீஸ்பூன் பெருங்காயம் தூள்
  • உப்பு
  • கறிவேப்பிலை
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 கரண்டி
  • 1 கடாய்
  • 1 இட்லி பாத்திரம்

Steps:

  1. முதலில் வாழைப்பூவை சிறுதாக அரிந்து மோர் தண்ணீரில் போட்டு வைத்து கழுவி எடுத்து உப்பு மஞ்சள்தூள் சேர்த்து வேக விட்டு எடுத்துக் கொள்ளவும்.
  2. கடலை பருப்பு, துவரம் பருப்பை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊரவிட்டு வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
  3. பின்னர் அதனுடன் வரமிளகாய், உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  4. ஒரு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து உள்ளே ஒரு தட்டு வைத்து அரைத்த பருப்பை ஆவியில் 10 நிமிடம் வேக விட்டு ஆறவிட்டு வைத்துக் கொள்ளவும்.
  5. ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை, பெருங்காயம் தாளித்து அதில் வேக வைத்து உதிர்த்து வைத்திருக்கும் பருப்பை சேர்த்து நன்றாக வறுக்கவும்.
  6. நன்றாக உதிர்ந்து வந்ததும் அத்துடன் வேக வைத்து வெச்சிருக்கும் வாழைப்பூவை சேர்த்து நன்றாக கலந்து கிளறி விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
  7. சுவையான வாழைப்பூ பருப்பு உசிலி சாப்பிட தயார். சாதத்துடன் தொட்டு சாப்பிட மிகவும் பிரமாதமாக இருக்கும்.