தக்காளி உருளை கடைசல் இப்படி செய்யுங்கள் கறி குழம்பையும் மிஞ்சும் சுவையில் அட்டகாசமாக இருக்கும்!

Summary: இந்த காய்கறி வகைகளிலே உருளைக்கிழங்கு தான்அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. சப்பாத்தி பூரி இதுக்கெல்லாம் எப்போதும் போலஇல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக இந்த தக்காளி உருளை கடைசல் செஞ்சி பாருங்க. இந்த கிரேவிஇருந்தா போதும் அசைவம் கூட தேவைப்படாது. அந்த அளவிற்கு இதன் சுவை பிரமாதமாக இருக்கும்.இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில்தக்காளி உருளை கடைசல் சுலபமாக அதே நேரத்தில் ருசியாகவும்எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.இதே அளவுகளில் தக்காளி உருளை கடைசல் ஒருமுறை செஞ்சு பாருங்க, ருசி அபாரமாக இருக்கும்.. இந்த உருளைக்கிழங்கை வைத்து  நாம் வீட்டில் விதவிதமாக செய்தாலும் கூட இட்லி,தோசை ,பூரிக்கு என்னை உணவாக இந்த தக்காளி உருளை கடைசல் மிகவும் ருசியாக இருக்கும்.தக்காளி உருளை கடைசல் நாம் வீட்டில் எப்படி சுலபமாக செய்வது என்று தான் இப்பொழுது தெரிந்துகொள்ள போகிறோம்.

Ingredients:

  • 3 தக்காளி
  • 3 உருளைக்கிழங்கு
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 காய்ந்த மிளகாய்
  • 2 இணுக்கு கறிவேப்பிலை
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • உப்பு
  • 2 தேக்கரண்டி எண்ணெய்
  • மல்லித்தழை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும். தக்காளி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், காய்ந்த மிளகாய், ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  2. அடுப்பில் பாத்திரம் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளிக்கவும்.
  3. அதனுடன் பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, தக்காளி, உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. ஓரளவு வதங்கியவுடன் உப்பு சேர்த்து அரை டம்ளர் நீர் விட்டு மூடி வேக வைக்கவும். நன்றாக வெந்ததும் மத்தினால் நன்கு கடைந்து விட்டு மல்லித் தழை தூவி இறக்கவும்.
  5. சுவையான தக்காளி உருளை கடைசல் தயார்.