Summary: குழந்தைகள் என்றாலே அவர்களின் குறும்புத்தனம் அதிகமாக இருக்கும். அப்படி குழந்தைகள் சாப்பிடும் விஷயத்தில் மிகவும் அடம்பிடிப்பார்கள். இதை சாப்பிடுவது நல்லது அல்ல என்று நாம் எதை சொல்கிறோமோ அதை தான் அவர்கள் அடம்பிடித்து கேட்பார்கள். பல குழந்தைகளும் விருப்பமாக சாப்பிடும் ஒரு உணவு வகை நூடுல்ஸ். ஆனால் இந்த நூடுல்ஸ் உடம்பிற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய வேதிப்பொருட்கள் கலந்து இருப்பதால் அவை உடல்நல பிரச்சனையை கொடுத்து விடுகிறது. எனவே பெற்றோர்கள் இதனை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். அவர்கள் நூடுல்ஸ் கேட்டு அடம் பிடிக்கும் நேரத்தில் இப்படி வீட்டில் இருக்கும் சேமியா வைத்து சுவையான சேமியா தக்காளிபாத் செய்து கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். எப்படி இந்த சுவையான சேமியா தக்காளி பாத் சமைக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.