ஸ்ரீரங்கம் அய்யர் வீட்டு வத்த குழம்பு செய்வது எப்படி ?

Summary: இங்கு ஸ்ரீரங்கம் வத்தக்குழம்பை எப்படி செய்வது, தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை விளக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நீங்களும் இதை படித்து பார்த்து உங்கள் வீட்டில் சமைத்து குடும்பத்துடன் சாப்பிட்டு பாருங்கள். அவ்வளவு ருசியாகவும் இருக்கும் அனைவரும் விரும்பியும் சாப்பிடுவார்கள். இந்த வாரம் ஒரு நாள் ட்ரைப் பன்னி பாருங்கள்.

Ingredients:

  • 1 கப் சுண்டக்காய்
  • 2 டேபிள் ஸ்பூன் வெந்தயம்
  • 2 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு
  • 2 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 2 டேபிள் ஸ்பூன் மல்லி
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகு
  • 1 டேபிள் ஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 4 வரமிளகாய்
  • புளி
  • 50 கிராம் சின்ன வெங்காயம்
  • 1 டேபிள் ஸ்பூன் வெல்லம்
  • 1 டேபிள் ஸ்பூன் அரிசி
  • கறிவேப்பிலை
  • உப்பு
  • நல்லெண்ணெய்
  • 1 டேபிள் ஸ்பூன் கடுகு
  • 2 டேபிள் ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • 2 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு

Equipemnts:

  • 2 குழம்பு பாத்திரம்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் எலுமிச்சை அளவு புளியை ஊற வைத்து கரைத்து புளி கரைசல் தயார் செய்து கொள்ளவும்.
  2. ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் வெந்தயத்தை போட்டு வறுத்து பொடி செய்துக் கொள்ளவும்.
  3. பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வரமிளகாய், மிளகு, அரிசி,மல்லி, துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு, ஆகியவற்றை ஒவொன்றாக சேர்த்து வறுத்து இறக்கி, அவற்றை குளிர வைத்து மிக்சியில் போட்டு பொடி செய்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
  4. பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணைய் ஊற்றி எண்ணைய் காய்ந்ததும், கடுகு சேர்த்து வெடித்ததும், உளுத்தம் பருப்பு, மற்றும் கடலைப் பருப்பு, சேர்த்து தாளிக்கவும். பிறகு அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
  5. பின் வெங்காயம் நன்றாக வதங்கியதும் சுண்டக்காய் சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் வெந்தயப் பொடி சேர்த்து கிளறி விட வேண்டும்.
  6. அடுத்து அதில் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
  7. பின் அதில் அரைத்து வைத்துள்ள பொடி,மற்றும் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், வெல்லம், கருவேப்பிலை, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விடவும்.
  8. குழம்பு திக்கான பதம் வந்தவுடன் அதன் மேல் சிறிது நல்எண்ணைய் ஊற்றி இறக்கினால், ஸ்ரீரங்கம் வத்த குழம்பு ரெடி!!!