மதிய உணவுக்கு இனி கத்திரிக்காய் கறி குழம்பு இப்படி செய்து பாருங்க! ஒரு தட்டு சோறும் காலியாகும்!

Summary: கத்திரிக்காயில் நிறைய வகையில் உணவுகள் செய்யப்படுகின்றன, கத்திரிக்காய் குழம்பு, கத்திரிக்காய் பொரியல் போன்று செய்யப்படுகின்றன. அந்தவகையில் முழு கத்திரிக்காய் கரி குழம்பு எப்படி செய்வதென்று தான் பார்க்க போகிறோம். மதியம் சுட சுட சாதத்த்துடன் இந்த கிரேவியை சேர்த்து சாப்பிட்டால் அட அட அவ்வளவு சுவையாக இருக்கும். கத்திரிக்காய் விரும்பாதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவாங்க.

Ingredients:

  • 7 கத்திரிக்காய்
  • எண்ணெய்
  • 1 பிரியாணி இலை
  • 2 பட்டை
  • 2 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • ½ ஸ்பூன் மிளகு
  • ½ ஸ்பூன் சோம்பு
  • ½ ஸ்பூன் சீரகம்
  • 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 4 பச்சை மிளகாய்
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • உப்பு
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 ஸ்பூன் மிளகாய் பொடி
  • 2 ஸ்பூன் மல்லி தூள்
  • கொத்தமல்லி தலை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் கத்திரிக்காயை கழுவி சுத்தம் செய்து முழுக்கத்திரிகை போலவே நாலு பக்கமும் வெட்டிக்கொள்ளவும்.
  2. அடுத்து ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி வெட்டிய கத்திரிக்காயை போட்டு நன்கு வதக்கிக்கொள்ளவும்.
  3. பிறகு ஒரு கடையில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சோம்பு, சீரகம், மிளகு, இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. அடுத்து தக்காளி சேர்த்து, அத்துடன் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு மூடி போட்டு நன்கு வேக விடவும்.
  5. அடுத்து வெந்ததும் வதக்கிய கத்திரிக்காயை சேர்த்து மீண்டும் பிரட்டி மூடி போட்டு 5 நிமிடம் அப்படியே விடவும்.
  6. பிறகு அதில் கொத்தமல்லி இலைகளை தூவி இரக்கவும்.