இனி முட்டை மசாலா இப்படி கிராமத்து ஸ்டைலில் ஒரு தடவை செய்து பாருங்க! வாய்க்கு ருசியாக இருக்கும்!

Summary: முட்டை என்றால் யாருக்கு தான் பிடிக்காது? உங்களுக்கு முட்டையில் என்ன செய்து கொடுத்தாலும் பிடிக்குமா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட முட்டை மசாலா இனி இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்.சாம்பார் சாதம், ரசம் சாதம், சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 6 முட்டை
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 வெங்காயம்
  • உப்பு
  • மஞ்சள் தூள்
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 ஸ்பூன் மட்டன் மசாலா
  • மிளகு தூள்
  • கொத்தமல்லி தலை

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் முட்டைகளை வேக வைத்து தோலுரித்து கீறி வைத்துக்கொள்ளவும்.
  2. அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  3. வதங்கியதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், சேர்த்து கலந்து கொஞ்சம் தண்ணீர் தெளித்து கொதிக்கவிடவும்.
  4. அடுத்து அதில் மட்டன் மசாலா சேர்த்து கிளறி வேக வைத்த முட்டைகளை சேர்த்து அத்துடன் மிளகு தூள், கொத்தமல்லி தலை தூவி பரிமாறவும்.