மழைக்கு இதமா சுட சுட பீட்ரூட் கோலா உருண்டை செய்வது எப்படி ?

Summary: இது போன்று சைவ கோலா உருண்டைகளையும் சில காய்கறிகளை பயன்படுத்தி நாம் செய்யலாம் அப்படிதான் இன்று நாம் பீட்ரூட்டை பயன்படுத்தி கோலா உருண்டை செய்ய போகிறோம். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் பீட்ரூட்டை ஒதுக்குகிறார்கள் என்றால். இது போன்று பீட்ரூட்டில் இந்த சைவ கோலா உருண்டை செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். மேலும் இது போன்ற மழை நேரங்களில் மலைக்கு இதமாக சுட சுட செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • ¼ கப் துருவிய தேங்காய்
  • 4 பச்சை மிளகாய்
  • 4 சின்ன வெங்காயம்
  • 1 tsp சோம்பு
  • 2 பட்டை
  • 1 tsp கசகசா
  • 1 பல் பூண்டு
  • 1 துண்டு இஞ்சி
  • 1 பெரிய பீட்ரூட்
  • அரைத்த தேங்காய்
  • 2 tbsp பொட்டு கடலை மாவு
  • 1 tbsp அரிசி மாவு
  • உப்பு
  • பொரிக்க எண்ணெய்

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் நான்கு டேபிள் ஸ்பூன் அளவு பொட்டுக்கடலை சேர்த்து மாவாக அரைத்துக் கொள்ளுங்கள். பின் அரைத்த பொட்டுகடலை மாவை தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
  2. பின் மீண்டும் மிக்ஸி ஜாரில் கால் கப் துருவிய தேங்காய், நான்கு பச்சை மிளகாய், 4 சின்ன வெங்காயம், ஒரு டீஸ்பூன் சோம்பு, இரண்டு பட்டை, ஒரு டீஸ்பூன் கசகசா ஒரு பல் பூண்டு, ஒரு துண்டு இஞ்சி போன்ற பொருட்களை சேர்த்து கொரகொரவென அரைத்துக் கொள்ளுங்கள்.
  3. முக்கியமாக இதனுடன் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளுங்கள். பின்பு ஒரு பெரிய பவுளில் ஒரு பெரிய அளவு பீட்ரூட்டை துருவி சேர்த்து அதனுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் அளவு பொட்டுக்கடலை மாவு, அரைத்த தேங்காய், தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு அரிசி மாவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.
  4. பின்பு பீட்ரூட்டை சிறு சிறு உருண்டையாக பிடித்து ஒரு தட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். பின் கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, தீயை மிதமாக எரிய விட்டு பின் எண்ணெய் காய்ந்ததும்.
  5. பின் நாம் உருண்டை பிடித்து வைத்திருக்கும் கோலா உருண்டையை கடாயில் சேர்த்து நன்கு வேகமாறு பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் சுவையான சைவ பீட்ரூட் கோலா உருண்டை இனிதே தயாராகி விட்டது.