கிராமத்து பாட்டி ஸ்டைல் வெங்காய போண்டா செய்வது எப்படி ?

Summary: காலை உணவில் டிபன் உடன் வெங்காய போண்டாவை சாப்பிடும் போது அதன் சுவை அற்புதமாக இருக்கும். ஆம், இன்று வெங்காய போண்டா பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நீங்கள் உங்கள் வீடுகளில் மழைக்காலங்களில் சூடாக சாப்பிட விரும்பினாலும், காலையில் டிபன் அல்லது டீயுடன் ஸ்நாக்ஸ் கொடுக்க விரும்பினாலும் இந்த வெங்காய போண்டாவை தயார் செய்து கொடுங்கள். உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 4 பெரிய வெங்காயம்
  • 1 துண்டு இஞ்சி
  • 4 பச்சை மிளகாய்
  • 1 கொத்து மல்லி இலை
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 சிட்டிகை பெருங்காயத்தூள்
  • 2 tbsp மிளகாய் தூள்
  • உப்பு
  • 1 கப் கடலை மாவு
  • ½ கப் அரிசி மாவு
  • 2 tbsp சூடான எண்ணெய்
  • எண்ணெய்
  • தண்ணீர்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்
  • 1 பவுள்

Steps:

  1. போண்டா செய்ய முதலில் வெங்காயம் பெரிய அளவு வெங்காயம் என்றால் இரண்டு எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது சிறிய வெங்காயமாக இருந்தால் நான்கு எடுத்துக் கொள்ளுங்கள். பின் வெங்காயங்களை நீளவாக்கில் நறுக்கி ஒரு பெரிய பவுலில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  2. அதன் பின் இதனுடன் ஒரு துண்டு இஞ்சி இடித்து சேர்த்துக் கொள்ளுங்கள். பின்பு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், ஒரு கொத்து மல்லி இலை, ஒரு கொத்து கருவேப்பிலை, ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள், 2 டீஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு முறை நன்கு கலந்து கொள்ளவும்.
  3. அதன் பின்பு இதனுடன் ஒரு கப் கடலை மாவு மற்றும் அரை கப் அரிசி மாவு சேர்த்து முதலில் நன்றாக கலந்து கொள்ளுங்கள் அதன் பின் இரண்டு டீஸ்பூன் சூடான எண்ணெயை சேர்த்து கலந்து கொள்ளுங்கள் அதன் மீது செய்தி சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவை நன்றாக கலந்து விடுங்கள்.
  4. மாவு உருண்டை பிடிக்கும் பதத்திற்கு ஏற்ப தண்ணீர் சேர்க்கவும் அதன் பின் கடாயில் வெங்காய போண்டா முழ்க்கும் அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கி கொள்ளுங்கள்.பிறகு வெங்காய போண்டாவை டைட்டாக அழுத்தி எடுக்காமல் ஒரு உருண்டை பிடித்து கடாயில் போட்டுக் கொள்ளுங்கள்.
  5. இப்படியாக மீதம் இருக்குமம மாவையும் உருண்டை பிடித்துக் கடாயில் சேர்த்து வெங்காயம் போண்டா நன்றாக சிவந்து வந்ததும் வெளியே எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் வெங்காய போண்டா இனிதே தயாராகிவிட்டது.