நமது பாரம்பரிய சைடிஷா கொத்தவரங்காய் வற்றல் எப்படி செய்ய வேண்டும் தெரியுமா ? இப்படி செய்து பாருங்க!

Summary: நாம் ரசம், மோர் குழம்பு போன்றவற்றுடன் வைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற கொத்தவரங்காய் வற்றல் பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த கொத்தவரங்காய் வற்றலை வைத்து வத்தல் குழம்பு செய்யும் பொது சேர்த்து கொள்ளலாம் அல்லது சாப்பிடும் போது சைடிஷ் இல்லை என்றால் சிறிது எண்ணெயில் பொரித்து சத்தத்துடன் தொட்டுக்கொள்ளலாம். மிகவும் சுவையாக இருக்கும்.அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • ¼ கிலோ கொத்தவரங்காய்
  • உப்பு
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் கொத்தவராகயின் இரு ஓரங்களையும் நீக்கவும்.
  2. பிறகு தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், சேர்த்து மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
  3. கொத்தவரங்காய் நன்கு வெந்ததும், இறக்கி வடிகட்டவும்.
  4. இதை வெயிலில் நன்கு காயவிடவும். (முறுகலாக உடையும் பதம் வரை காயவிடவும்)
  5. பிறகு காற்றுபுகாத டப்பாவில் சேகரிக்கவும். இதை வற்றல் குழம்பு செய்யும் போது சேர்க்கலாம்.
  6. அல்லது, தனியாக எண்ணெயில் பொரித்து ரசம் சாதம், மோர் சாதம், சாப்பிடும் போது தொட்டுக்கொள்ளலாம்.