ஆந்திரா ஸ்பெஷல் காரசாரமான நண்டு மசால் இப்படி மட்டும் செஞ்சி பாருங்க! இதன் ருசியே அலாதியாக இருக்கும்!

Summary: நண்டு இது அதிக சூட்டை அதிகரிக்கும் அதனால் மழை காலங்கள், அல்லது குளிர் காலங்களில் செய்து சாப்பிட்டால் இதமாக இருக்கும். நண்டில் அதிக சத்துக்கள் உள்ளது. அதுமட்டும் அல்லாமல் சுவையும் அற்புதமாக இருக்கும். இந்த நண்டு மசாலா சுலபமாக செய்து விடலாம் ஒரு முறை நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 6 நண்டு
  • 4 பெரிய வெங்காயம்
  • 3 தக்காளி
  • 1 மேஜைக்கரண்டி தேங்காய்
  • 1 தேக்கரண்டி தனியா
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • 1 தேக்கரண்டி சோம்பு
  • 1 தேக்கரண்டி மிளகு
  • 5 மிளகாய்
  • எண்ணெய்
  • உப்பு

Steps:

  1. முதலில் வெங்காயம் தக்காளி நறுக்கிக் கொள்ளவும்.
  2. பிறகு தேங்காய், தனியா, சீரகம், சோம்பு, மிளகு, மிளகாய், ஆகியவற்றை மிக்சியில் சேர்த்து அரைக்கவும்.
  3. அடுத்து கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, இரண்டையும் நன்கு வதக்கி சுத்தம் செய்த நண்டுகளை அதில் சேர்த்து அதில் அரைத்த மசாலா சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்கு வேகவிடவும்.
  4. வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கவும். இப்பொழுது சுவையான நண்டு மசாலா தயார்.