அடுத்தமுறை நாட்டு கோழி வாங்கி மதுரை ஸ்டைல் மிளகு வறுவல் இப்படி செய்யுங்கள்!

Summary: பிராய்லர் கோழியை விட நாட்டுக்கோழி தான் உடலுக்கு நல்லது எனவே முடிந்தவரை பிராய்லர் வாங்கி சமைப்பதைத் தவிர்க்கவும். நாட்டுக்கோழியை வாங்கி சமைத்து சுவையுங்கள் அதிலும் நாட்டுக்கோழியை மதுரை ஸ்டைலில் வறுவல் செய்து சுவைக்க அட்டகாசமாக இருக்கும். இந்த வார கடைசில் நீங்களும் இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • ½ கிலோ நாட்டுக்கோழி
  • 150 கிராம் சின்ன வெங்காயம்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • ¼ டீஸ்பூன் சோம்பு
  • 1 ஸ்பூன் மிளகு தூள்
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 ஸ்பூன் தனியா தூள்
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 2 கிராம்பு
  • 2 பட்டை
  • மல்லி இலை
  • நல்லெண்ணெய்

Equipemnts:

  • 1 குக்கர்
  • 1 கடாய்

Steps:

  1. முதலில் நாட்டுக்கோழியை நன்கு சுத்தம் செய்துகொள்ளவும். அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், உப்பு, 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் போட்டு 3 விசில் வேகவிட்டு இறக்கவும்.
  2. அதன் பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், பட்டை, கிராம்பு, சோம்பு, சேர்த்து தாளித்து அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும், அதனுடன் வேக வைத்துள்ள சிக்கனை சேர்த்து, அணைத்து மசாலா தூள்களையும் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
  3. தண்ணீர் நன்கு வற்றியதும், மல்லி இலைகளை தூவி இறக்கவும்.
  4. இப்பொழுது சுவையான மதுரை நாட்டுக்கோழி மிளகு வறுவல் ரெடி.