அடுத்தமுறை இட்லி, தோசைக்கு வேர்க்கடலை சட்னி இப்படி செய்து பாருங்க! 10 இட்லியாவது சாப்பிடுவாங்க!

Summary: இட்லி, தோசைக்கு எப்பொழுதும் தேங்காய் சட்னி, சாம்பார் சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா அப்போ இனி கவலை வேண்டாம். ருசியான வேர்க்கடலை சட்னி இப்படி செய்து பாருங்க, மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க.இந்த சட்னி செய்வதும் மிகவும் சுலபம் தான், குறைந்த நேரத்தில் அட்டகாசமான சுவையில் செய்து விடலாம்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க.இந்த சட்னி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணுங்க.

Ingredients:

  • ¼ கப் வேர்க்கடலை
  • 1 டீஸ்பூன் எண்ணெய்
  • 8 பல் பூண்டு
  • 7 பச்சை மிளகாய்
  • 3 வரமிளகாய்
  • 3 காய் தக்காளி
  • உப்பு
  • புளி
  • கொத்தமல்லி இலை
  • பெருங்காய பொடி
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 2 வர மிளகாய்
  • 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • கறிவேப்பிலை

Equipemnts:

  • 2 கடாய்

Steps:

  1. முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றாமல் வேர்க்கடலையை போட்டு சிவக்க வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. அடுத்து அதே கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், பூண்டு, பச்சை மிளகாய், வர மிளகாய், சேர்த்து கொஞ்சம் நேரம் வதக்கவும்.
  3. பச்சை மிளகாய் நிறம் மாறியதும், நறுக்கிய தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதங்கியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து, புளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. தக்காளி நன்கு வதங்கியதும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து வதக்கவும்.
  5. கொத்தமல்லி வதங்கியதும் அதனை சிறிது நேரம் ஆறியதும் மிக்சியில் சேர்த்து பெருங்காயம் பொடி சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
  6. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்டினில் சேர்த்து பரிமாறவும்.