அடுத்தமுறை சேலம் மொச்சைக்காய் குழம்பு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

Summary: தினமும் மதியும் குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா.அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய வீட்டில் இருக்கும் பெரிவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் படியாக சுவையான சேலம் மொச்சிக்காய் குகை கூட்டு குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சேலம் மொச்சிக்காய் குகை கூட்டு குழம்பு விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • ¾ cup மல்லி
  • 1 tsp கடலைப்பருப்பு
  • tsp உளுந்தம் பருப்பு
  • 2 tsp பச்சரிசி
  • 1 tsp கசகசா
  • 1 tsp சோம்பு
  • 1 tsp சீரகம்
  • 1 tsp மிளகு
  • 3 பட்டை
  • 3 கிராம்பு
  • 1 tsp வெந்தயம்
  • 10 கருவேப்பிலை
  • 11 சின்ன வெங்காயம்
  • 1 cup தேங்காய் சில்
  • 1 தக்காளி
  • 2 cup மொச்சை
  • 1 tsp மிளகாய் தூள்
  • 10 gm புளி
  • 1 tsp கடுகு
  • 5 பூண்டு
  • 1 வெங்காய வடகம்
  • தேவையான அளவு உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Steps:

  1. சேலம் குகை மொச்சைக்காய் கூட்டு குழம்பு செய்ய முதலில் புளியை ஊறவைத்து கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.மொச்சை பயிரை வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.சின்ன வெங்காயம், தேங்காய் சில் மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  2. கடாயில் மல்லி, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பச்சரிசி, கசகசா,சோம்பு,சீரகம், மிளகு,பட்டை,கிராம்பு,வெந்தயம் கருவேப்பிலை ஆகியவற்றை நன்றாக பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  3. வறுத்தவற்றை மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.குக்கரில் எண்ணெய் ஊற்றி தக்காளி, மொச்சைக்காய் போட்டு நன்றாக வதக்கி பின் மிளகாய்த்தூளை சேர்க்க வேண்டும்.
  4. பின் அரைத்த பொடியை சேர்த்து நன்றாக கிண்ட வேண்டும்நன்றாக வதங்கியதும் புளிக்கரைசலை சேர்க்க வேண்டும். உப்பு சேர்க்க வேண்டும்
  5. குக்கரில் மூன்று விசில் வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.பின் வேறு கடாயில் கடுகு, இடித்த பூண்டு, கடலைப்பருப்பு, வெங்காய வடகம் ஆகியவற்றை தாளித்து குழம்பில் போட வேண்டும்.இப்பொழுது சுவையான சேலம் குகை கூட்டு குழம்பு தயார்.