மொறு மொறுப்பான காய்கறி தோசை செய்வது எப்படி ?

Summary: உங்களிடம் தோசை மாவு இல்லாத பட்சத்தில் தோசை சாப்பிட வேண்டும் என்று தோன்றினாள் உடனடியாக இதுபோன்ற சமயங்களில் நீங்கள் இந்த தோசை மாவை தயார் செய்து மொறு மொறுப்பான காய்கறி தோசையை சுட்டு சாப்பிடலாம். குறிப்பாக உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு இந்த தோசை மிகவும் விரும்பி சாப்பிடும் படியாக இருக்கும் குழந்தைகள் மட்டும் இல்லாமல் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு இரவு உணவாகவே இது மாறி போகும் அந்த அளவிற்கு மிகவும் பிரமாதமான மற்றும் எளிமையான முறையில் செய்யக்கூடிய இரவு உணவு. இந்த மொறுமொறுப்பான காய்கறி தோசை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 1 கப் அரிசி மாவு
  • 2 ½ கப் தண்ணீர்
  • 1 tbsp இஞ்சி
  • 2 பச்சை மிளகாய்
  • 1 கேரட்
  • 1 பெரிய வெங்காயம்
  • ½ கப் கருவேப்பிலை
  • ½ கப் கொத்த மல்லி
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்
  • 1 தோசை கல்

Steps:

  1. முதலில் ஒரு கப் அரிசி மாவை மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும். பின் அரை கப் அரிசி மாவுக்கு இரண்டு அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு மிக்ஸியில் போட்டு நன்கு அடித்துக் கொள்ளவும். பின்பு இந்த மாவை ஒரு பெரிய பவுளில் மாற்றிக் கொள்ளுங்கள்.
  2. அதன் பிறகு இந்த மாவுடன் பொடியாக நடிக்க இஞ்சி துண்டுகள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய கேரட் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் போன்ற பொருட்களை எல்லாம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  3. அதன் பிறகு இதனுடன் அரை கப் கருவேப்பிலை மற்றும் அரை கப் கொத்தமல்லி இரண்டையும் சிறிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்பு அரை டீஸ்பூன் மிளகுத்தூள் தேவையான அளவு உப்பும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  4. அதன் பின் கடைசியாக நான்கு வர மிளகாயை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக தூள் தூளாக்கி அதையும் இதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். பின் தோசை கல்லை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி தோசைக்கல் நன்கு காய்ந்ததும் மாலை நன்கு கலக்கி தோசை ஊற்றிக் கொள்ளுங்கள்.
  5. தோசை ஊற்றும் போது இடைவெளிகள் இல்லாமல் மாவை ஊற்றி இரு புறமும் திருப்பி போட்டு எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின் மறுபடியும் தோசை ஊற்றும்பொழுது மாவை நன்கு கலந்து கொள்ளுங்கள்.
  6. ஏனென்றால் அரிசி மாவு கீழே படிந்து விடும் இப்படியாக மீதம் இருக்கும் மாவல் தோசை ஊற்றிக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் மொறுமொறுப்பான காய்கறி தோசை தயார்.