மதிய உணவுக்கு உருளைக்கிழங்கு முட்டை பொரியல் இப்படி செய்து பாருங்க! சுடு சோறுடன் சாப்பிட பக்காவா இருக்கும்!

Summary: நம்மில் சில பேர் சாப்பிடும் போது, சைடிஷ் இல்லையென்றால் சாப்பிடவே மாட்டார்கள். சைடிஷ் செய்வதற்கு வீட்டில் வேறு காய்கறிகள் இல்லையா? துவையல் செய்வதற்கு தேவையான பொருள்கள் இல்லையா? கவலையே வேண்டாம். இந்த பதிவு உங்களுக்காக தான். ஒரே ஒரு தரம் இந்த முறையில் சைடிஷ் செய்து பாருங்கள். ஒரே ஒரு முறை நீங்கள் செய்தால் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். இந்த முறையில் சைடிஷ் எப்படி செய்வது, தேவையான உபகரணங்கள் என்ன, சைடிஷ் செய்வதற்கு செய்முறை பற்றி இப்போது காண்போம்.

Ingredients:

  • 2 முட்டை
  • 3 உருளைக்கிழங்கு
  • 3 tsp எண்ணெய்
  • 1 tsp சீரகம்
  • 1 பெரிய வெங்காயம்
  • 3 பச்சை மிளகாய்
  • உப்பு
  • சிக்கன் 65 மசாலா

Equipemnts:

  • 1 பெரிய பவுல்
  • 1 கடாய்

Steps:

  1. முதலில் உருளைக்கிழங்கின் தோலை நீக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கு பெரியதாக இருக்க வேண்டும். அதன் தோலை நீக்கிய பின் சிறிய அளவில் நறுக்கி எடுத்துக் கொள்ளவும். பெரிய பாத்திரத்தில் நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்து, தண்ணீர் ஊற்றி ஒரு இரண்டு முறை நன்றாக அலசி எடுக்கவும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் சீரகம் சேர்த்து, பின் நறுக்கி வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து, அதோடு பச்சை மிளகாய், நறுக்கி வைத்த வெங்காயம், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துவிட்டு, ஒரு ஐந்து நிமிடம் மூடி வைக்கவும்.
  3. உருளைக்கிழங்கு நன்கு மாவு போல் வெந்ததும், அதன் மேல் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும். சிக்கன் 65 மசாலா எடுத்து, உருளைக்கிழங்கின் மேல் சாரல் போல தூவி, நன்கு கலந்து விட்டு இறக்கினால், சுவையான உருளைக்கிழங்கு, முட்டை சைடிஷ் தயார்.