கல்யாண வீட்டு கத்திரிக்காய் மொச்சை கூட்டு இப்படி செய்து பாருங்க! ஆஹா இதன் சுவையே தனி!

Summary: கல்யாண வீட்டு கத்திரிக்காய் மொச்சை கூட்டு என்றாலே யாருக்கு தான் பிடிக்காது எல்லோரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் அட்டகாசமான சுவையில் இருக்கும். ஆனால் அந்த சுவையில் வீட்டில் எப்படி செய்வதென்று சிலருக்கும் தெரியாது, இனி அந்த கவலை வேண்டாம் நாம்பளும் வீட்டிலேயே கல்யாண வீடுகளில் தரப்படும் மொச்சை கூட்டு அதே சுவையில், சுலபமாக செய்து விடலாம். இந்த கூட்டு செய்து சாதம், சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமான சுவையில் இருக்கும்.

Ingredients:

  • 1 கப் மொச்சை
  • ¼ கப் பாசி பருப்பு
  • மஞ்சள் தூள்
  • 100 கிராம் கத்திரிக்காய்
  • 6 சின்ன வெங்காயம்
  • 1 டேபிள் ஸ்பூன் சாம்பார் பொடி
  • ½ கப் தேங்காய் துருவல்
  • ¼ டீஸ்பூன் சோம்பு
  • ½ டீஸ்பூன் சீரகம்
  • ¼ டீஸ்பூன் பெருங்காய பொடி
  • உப்பு
  • எண்ணெய்
  • ¼ டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 4 காய்ந்த மிளகாய்
  • 4 சின்ன வெங்காயம்
  • கருவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 குக்கர்

Steps:

  1. முதலில் குக்கரில் பாசிப்பருப்பை கழுவி சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அத்துடன் மஞ்சள் தூள் சேர்த்து மிதமான தீயில் 2 விசில் விட்டு வேகவிட்டு எடுக்கவும்.
  2. பிறகு வெந்ததும், ப்ரெஷர் போனதும் மொச்சை சேர்த்து சேர்த்து 2 விசில் விட்டு வேகவிடவும், பிறகு நறுக்கிய கத்திரிக்காய், நறுக்கிய சின்ன வெங்காயம், சாம்பார் பொடி சேர்த்து கலந்து காய்கறிகள் மூல்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து 1 விசில் விட்டு வேகவிடவும்.
  3. வேகும் சமயத்தில், மிக்சியில் தேங்காய் துருவல், சீரகம், சோம்பு, சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக்கொள்ளவும்.
  4. அடுத்து விசில் வந்ததும் அதில் பெருங்காய பொடி சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கலந்து இரண்டு கொத்தி விடவும்.
  5. பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து சிவக்க வறுத்து கறிவேப்பிலை இலைகளை சேர்த்து கூட்டில் கொட்டி கலந்து விடவும்.
  6. இப்பொழுது சுவையான கல்யாண வீட்டு மொச்சை கத்திரிக்காய் கூட்டு தயார்.