ரோட்டு கடை ஸ்டைல் முட்டை கொத்து பரோட்டா இப்படி வீட்டிலயே செய்து பாருங்க!

Summary: முட்டை கொத்து பரோட்டா சுவையானது மற்றும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு ரெசிபி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றுதான் இந்த முட்டை கொத்து பரோட்டா.இதை ரோட்டுக்கடை ஸ்டைலில் எப்படி வீட்டிலே செய்வது என்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணுங்க.

Ingredients:

  • 5 பரோட்டா
  • 3 முட்டை
  • 2 வெங்காயம்
  • 1 தக்காளி
  • கருவேப்பிலை
  • 2 பச்சை மிளகாய்
  • 1 தேக்கரண்டி மிளகுத் தூள்
  • மஞ்சள் தூள்
  • உப்பு
  • சிக்கன் குழம்பு மட்டன் குழம்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் பரோட்டாவை சிறு சிறு துடுகளாக ஒன்றிரண்டாக பிய்த்துக்கொள்ளவும். தக்காளியை நசுக்கிக் கொள்ளவும்.
  2. பிறகு ஒரு இரும்பு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும், வெங்காயம், கருவேப்பிலை, பச்சை மிளகாய், சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
  3. வெங்காயம் வதங்கியதும் மிளகாய் தூள், மிளகுத்தூள், சேர்த்து நன்கு வதக்கவும், பின் தக்காளி சேர்த்து நன்கு மசியும்மாறு வதாகவும்.
  4. வதக்கிய பொருட்களின் நடுவில் அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  5. இறுதியாக சிக்கன்/மட்டன் குழம்பை ஊற்றி நன்கு கலக்கிக் கொள்ளவும்.
  6. கடைசியாக பிய்த்து வைத்துள்ள பரோட்டாவை சேர்த்து கலக்கி இரண்டு இரும்பு கரண்டிகளை வைத்து பரோட்டாவை நன்கு கொத்திக் சூடாக பரிமாறவும்.