மொறு மொறுப்பான அவல் வடை செய்வது எப்படி ?

Summary: உங்கள் குழந்தைகள் பள்ளி முடித்து வந்ததும் இந்த அவல் வடையை செய்து கொடுத்தீர்கள் என்றால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் மேலும் அடிக்கடி உங்களை செய்து தரச் சொல்லி தொல்லை பண்ணுவார்கள். சிறியவர்கள் மட்டுமில்லாமல் பெரியோர்களும் பிடித்த ஒரு வடையாக இருக்கும். இந்த அவல் வடையுடன் தக்காளி சட்னி மற்றும் தேங்காய் சட்னி வைத்து சாப்பிடும் பொழுது அதன் சுவை அற்புதமாக இருக்கும் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. இன்று இந்த மொறு மொறுப்பான அவல் வடை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • எண்ணெய்
  • 1 கப் வெள்ளை அவல்
  • 2 tbsp கடலை மாவு
  • 2 tbsp அரிசி மாவு
  • 1 பெரிய வெங்காயம்
  • 1  tbsp சீரகம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 துண்டு இஞ்சி
  • ½ tbsp மிளகாய் தூள்
  • 1 கைப்பிடி கொத்தமல்லி
  • உப்பு

Equipemnts:

  • 2 பெரிய பவுள்
  • 1 பவுள்
  • 1 கடாய்

Steps:

  1. முதலில் அவலை ஒரு முறை தண்ணீரில் நன்றாக அலசி கொண்டு மறுபடியும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் நன்றாக ஊற வைத்துக் கொள்ளுங்கள். சற்று தடிமனான அவலாக இருந்தால் இன்னும் சிறிது நேரம் சேர்த்து ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
  2. அதன் பின்பு அவல் நன்றாக ஊறியதும் தண்ணீரில் இல்லாமல் பிழிந்து எடுத்து கொள்ளுங்கல் தண்ணீருடன் இருந்தால் எண்ணெய் அதிகமாக குடிக்கும். எனவே அவலை நன்றாக பிழிந்து எடுத்து ஒரு பெரிய பவுளில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
  3. பின் அவளுடன் கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள் பின் இதனுடன் பொடி பொடியாக நறுக்கிய வெங்காயம், சீரகம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய கருவேப்பிலை சேர்த்து நன்றாக கிளறி விட்டுக் கொள்ளுங்கள்.
  4. அதன் பின்பு பொடியாக நறுக்கிய இஞ்சி மிளகாய் தூள் ஒரு கைப்பிடி மல்லி இலை மற்றும் கடைசியாக தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி மாவை நன்றாக பிசைந்து எடுத்துக் கொள்ளுங்கள் மாவு தண்ணியாக இல்லாமல் மிகவும் கெட்டியாக இருக்க வேண்டும்.
  5. பின்பு மாவை உருண்டை பிடித்து வடையை தட்டி எடுத்துக் கொள்ளுங்கள். பின் கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி தீயை மிதமான அளவில் வைத்து எண்ணெய் காய்ந்தவுடன் வடையை சேர்த்து பொறித்து எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் மொறு மொறுப்பான அவல் வடை இனிதே தயாராகிவிட்டது.