இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே! அடுத்தமுறை மட்டன் ஈரல் வாங்கினால் இப்படி ரோஸ்ட் செய்து பாருங்க!

Summary: ஆட்டு ஈரல் ரோஸ்ட் மிகவும் சுவையாகவும், காரசாரமாகவும் இருக்கும். மட்டன் பிரியர்களுக்கு மட்டனில் எந்த ரெசிபி செய்து கொடுத்தாலும் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் அவர்களுக்கு ஒரு முறை இந்த மாதிரியான ஆட்டு ஈரல் ரோஸ்ட் செய்து கொடுங்கள் அவ்வளவு அற்புதமாக இருக்கும். அசைவ பிரியர்களுக்கு ஏற்ற ஒரு ஆட்டு ஈரல் ரோஸ்ட், செய்து சாதத்திற்கு தொட்டும் சாப்பிடலாம். ரொம்ப ரொம்ப ஈஸியா வித்தியாசமான ஆட்டு ஈரல் ரோஸ்ட் எப்படி செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான ஆட்டு ஈரல் ரோஸ்ட் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 2 ஈரல்
  • 4 வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1 குடை மிளகாய்
  • 1 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • 3 பச்சை மிளகாய்
  • ¼ tsp கரம் மசாலா
  • ¼ tsp மஞ்சள் தூள்
  • 1 tbsp மிளகாய் தூள்
  • 1 tbsp மிளகு தூள்
  • 3 tbsp எண்ணெய்
  • ¼ tsp சோம்பு
  • 2 பட்டை
  • 1 லவங்கம்
  • 4 ஏலக்காய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Steps:

  1. ஆட்டு ஈரல் ரோஸ்ட் செய்ய முதலில் வெங்காயத்தையும், தக்காளி, பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கவும். ஈரலை நன்கு கழுவி துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை, லவங்கம், ஏலக்காய், கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும்.
  3. வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதை சேர்க்கவும். பிறகு ஈரலை சேர்த்து உப்பு, மஞ்சள், மிளகு, மிளகாய் தூளைச் சேர்த்து கிளறி மூடி விடவும்.
  4. ஆவியிலேயே ஈரல் நன்கு வெந்து விடும். பரிமாறும் போது பெரிய துண்டுகளாக வெட்டிய வெங்காயம், குடை மிளகாயை சேர்த்து பரிமாறவும். சுவையான ஆட்டு ஈரல் ரோஸ்ட் தயார்