அடுத்தமுறை மீன் வாங்கினால் இப்படி காரசாரமான மீன் ப்ரைடு ரைஸ் செய்து பாருங்க! தாறுமாறான சுவையில்!

Summary: நீங்கள் வழக்கம் போல் சிக்கன் ஃப்ரைடு ரைஸ், எஃக் ப்ரைடு ரைஸ் செய்து சாப்பிட கொடுக்காமல். அதுவும் இந்த ப்ரைடு ரைஸை கடைகளில் வாங்கி தருவது ஆரோக்கியமானது கிடையாது, அதனால் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த மீன் ப்ரைடு ரைஸ் செய்து கொடுங்கள் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள், அடுத்த முறையும் இதை செய்ய சொல்லி கேட்பார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும்.

Ingredients:

  • 1 கப் சாதம்
  • 2 துண்டுகள் பொறித்த மீன்
  • 2 வெங்காயம்
  • 2 முட்டை
  • 1 கப் கேரட், பீன்ஸ், கோஸ்
  • 1 பசைமிளகை
  • 7 பல் பூண்டு
  • 1 ஸ்பூன் ப்ரைட் ரைஸ் பொடி
  • உப்பு
  • 1 ஸ்பூன் டொமேட்டோ சாஸ்
  • 1 ஸ்பூன் சோயா சாஸ்
  • 5 ஸ்பூன் எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் பொறித்த மீனின் முள்ளை நீக்கி உதிர்த்து வைக்கவும்.
  2. பிறகு ஒரு கடாய்யை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் வதங்கியதும் முட்டை மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
  4. பிறகு அதில் உதிர்த்த மீனை சேர்த்து வதக்கவும்.
  5. அடுத்து பொடியாக நறுக்கிய காய்கறிகளை சேர்க்கவும்.
  6. காய்கறிகள் பாதி சுருண்டதும் ப்ரைட் ரைஸ் பொடி சேர்த்து வதக்கவும்.
  7. அதனுடன் சாஸ் வகைகளையும் சேர்த்து வதக்கவும்.
  8. கலவை நன்கு சுருண்டதும் சத்தத்தை கொட்டி 3 நிமிடங்கள் கிளறவும்.
  9. இப்பொழுது பிஸ் ப்ரைட் ரைஸ் ரெடி.
  10. குறிப்பு: இவை அனைத்து குறைந்த தீயில் வைத்து செய்யவும்.