அடிக்கடி பிரியாணி செய்வதற்கு இப்படி சிக்கன் புலாவ் செய்து பாருங்க! எவ்வளவு செய்தாலும் காலியாகும்!

Summary: பொதுவாக பலருக்கு சரியான பக்குவத்தில் சிக்கன் புலாவ் செய்யத்தெரியது. அதிலும் எளிமையான முறையில் செய்யத்தெரியாமல் இருக்கலாம். ஆகவே அத்தகையவர்களுக்காக, இப்பொழுது எளிமையான முறையிலும், சுவையாகவும் எப்படி சிக்கன் புலாவ் ரெசிபி செய்வதென்றுதான் நாம் இப்பொழுது பார்க்கப்போகிறோம்.இந்த மாரி உங்க வீட்டில் இருப்போருக்கு செய்து கொடுத்தால் போதும் அவளவுதான் உங்களை பாராட்டிக்கிட்டே இருப்பாக. அதுமட்டும் அல்லாமல் மீண்டும் எப்போ செய்விக்கணும் கேட்பாங்க, ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும் இந்த சிக்கன் புலாவ்.இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் செய்து அசத்துங்கள். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

Ingredients:

  • ½ கிலோ சிக்கன்
  • ஒரு கை பூண்டு
  • 200 கிராம் வெங்காயம்
  • 6 பச்சைமிளகாய்
  • 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 கப் தயிர்
  • ½ கப் புதினா கொத்தமல்லி
  • 2 பட்டை
  • 2 லவங்கம்
  • 2 ஏலக்காய்
  • 2 மராட்டி மொக்கு
  • ½ கிலோ` பாசுமதி அரிசி
  • 1 கப் தேங்காய் பால்
  • உப்பு
  • 1 குழிக்கரண்டி எண்ணெய்

Equipemnts:

  • 1 குக்கர்

Steps:

  1. முதலில் சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்துவைத்துக்கொள்ளவும். பிறகு வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  2. அடுத்து அரிசியை கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும்.
  3. குக்கரில் எண்ணெய் ஊற்றிஎண்ணெய் காய்ந்ததும், பட்டை, லவங்கம், ஏலக்காய், மராட்டி மொக்கு, புதினா, பச்சைமிளகாய், போட்டு வதக்கவும்.
  4. வதங்கியதும் அதில் நறுக்கிய வெங்காயத்தை போடவும். அத்துடன் ஒரு கைப்பிடி பூண்டு போட்டு வதக்கவும்.
  5. அடுத்து சிக்கனை போட்டு கிளறவும். சிக்கன் சிறிது வெந்ததும் தயிர் சேர்க்கவும்.
  6. பின்னர் அரிசி சேர்த்து கிளறவும். அரிசி சேர்ந்தவுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து கிளறவும்.
  7. தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது வதக்கவும். பின்னர் 1 கப் தேங்காய் பால், ஒரு கப் தண்ணீர் ஊற்றி கிளறவும்.
  8. மீதமுள்ள கொத்தமல்லி, புதினாவை சேர்த்து குக்கரை மூடி 3 விசில் 2 நிமிடம் மிதமான தீயில் வைத்து இறக்கவும்.
  9. இப்பொழுது சுவையான சிக்கன் புலாவ் ரெடி.