அடிக்கடி மட்டன் வாங்காமல் அடுத்தமுறை மட்டன் குடல் வாங்கி சால்னா இப்படி செய்து பார்க்கலாம்!

Summary: இட்லி தோசை குறிப்பா பரோட்டாவுக்கு இந்த சால்னா செமசைடிஷ். முட்டை தோசை வார்த்து அதன் மேலே இந்த ஆட்டு குடல் சால்னாவை ஊற்றி சாப்பிட்டால்சொல்லவே வேண்டாம். வேற லெவல் சுவையாக இருக்கும். ஆட்டு குடல் இது பலரால் போட்டி என அழைக்கப்படுகிறது. செரிமானம் சார்ந்த எந்தஒரு பிரச்சினை உள்ளவர்களுக்கும் மிகவும் நல்லது. குறிப்பாக அல்சர் என்று சொல்லக்கூடியவயிற்று புண்களை குணமாக்கும் மற்றும் செரிமான உறுப்புகளை வந்து வலுவாக்கி சீராக இயங்குவதற்கும்உதவிசெய்யக்கூடியது இந்த பிரிஞ்சி, வெள்ளை குஸ்கா, இது போன்ற காரம் குறைவான பிரியாணிவகைகளை ஆர்டர் செய்யும் போது அதற்கு சைட் டிஷ் ஆக ஒரு சால்னா கொடுப்பார்கள்

Ingredients:

  • 250 g ஆட்டுகுடல்
  • 3 வெங்காயம்
  • 2 தக்காளி
  • 3 பச்சமிளகாய்
  • 3 டேபுள்ஸ்பூன் இஞ்சி,பூண்டு பேஸ்ட்
  • 1/4 கட்டு கொத்து மல்லி
  • 1/4 கட்டு புதினா
  • 2 டீ பூன் மிளகாய்தூள்
  • 2 தனியாதூள்
  • 2 பட்டை
  • 2 லவங்கம்
  • 1 ஏலம்
  • 200 gram கத்திரிக்காய்
  • கால் கப் கடலைப் பருப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. குடலை மஞ்சள் தூள் கொஞ்சம் வினீகர் போட்டு, நன்றாக பத்து நிமிடம் ஊற வைத்து அதில்உள்ள அழுக்கை தேய்த்து கழுவவும். சுத்தம் செய்யப்பட்ட குடல் கிடைத்தால் பிரச்சனை இல்லை.
  2. சட்டியை காயவைத்து எண்ணை ஊற்றி சூடு வந்ததும் பட்டை,லவங்கம். ஏலம் போடவும். போட்டு அரிந்து வைத்துள்ள வெங்காயத்தை வதக்கவும் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பொன்னிறமாக வதக்கவும்
  3. அத்துடன் குடலையும் போட்டு பெறட்டவும். பிறட்டி ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து பிறகு தக்காளி,பச்ச மிளகாய், மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு வதக்கி ஐந்து நிமிடம் சிம்மில் வைக்கவும்
  4. அதற்கு ஏற்றார் போல தண்ணீர் ஆறு ஏழு கப் ஊற்றி அரை மணி நேரம் குக்கரில் வேகவிடனும். கடலைப்பருப்பை அந்த குக்க்கரிலேயே ஐந்து நிமிடம் ஊற வைத்து ஒருசிறிய பாத்திரத்தில் மூடி போட்டு வெயிட்டையும் போட்டு வேகவிடவும்
  5. வெந்து குக்கர் சவுண்டு அடங்கியதும் அதில் உள்ளே வைத்திருக்கும். கடலைப்பருப்பை லேசாக மசித்து போடவும் போட்டு கத்திரிக்காயை நான்காக அரிந்து போட்டு தேங்காயையும் அரைத்து ஊற்றி கொதிக்கவிட்டு கத்திரிக்காயை வெந்ததும் இறக்கிவிடவும்.
  6. அருமையான ஆட்டு குடல் சால்னா தயார்!