ஒரு முறை இப்படி மட்டும் ஜவ்வரிசி தோசை செய்து பாருங்க! இனி அடிக்கடி உங்க வீட்டில் இந்த தோசை தான்!

Summary: ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான உணவு வகைகளை சமைத்துக் கொடுத்தால் வீட்டில் உள்ள அனைவரும் மிகவும் விருப்பமாகசாப்பிடுவார்கள். அவ்வாறு இட்லி, தோசையே அதிகமாக செய்வது அனைவருக்கும் இருக்கின்ற ஒருவழக்கமாக மாறி விட்டது. ஆனால் இட்லி, தோசையை சற்று வேறுவித சுவைகளிலும் செய்ய முடியும்.அவ்வாறு ஒரு சில வீடுகளில் ஊத்தாப்பம், வெங்காய தோசை, ரவா தோசை என விதவிதமாக செய்துகொடுப்பார்கள். இப்படி வித்தியாசமான தோசையில் ஒரு வகைதான் இந்த ஜவ்வரிசி தோசை. இதன்சுவை மிகவும் அருமையாக இருக்கும். அதிலும் முக்கியமாக குழந்தைகள் இந்த உணவை விருப்பமாகசாப்பிடுவார்கள். வாருங்கள் இந்த ஜவ்வரிசி ஊத்தாப்பத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதைபற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Ingredients:

  • 1 கப் ஜவ்வரிசி
  • 1/4 கப் பச்சை பட்டாணி
  • 2 உருளைக்கிழங்கு
  • இஞ்சி
  • 1 வெங்காயம்
  • 2 பச்சைமிளகாய்
  • கறிவேப்பிலை
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. தோசை செய்வதற்கு அரை மணி நேரத்துக்கு முன் ஜவ்வரிசியை வெந்நீரில் ஊற வைக்கவும், பச்சைபட்டாணியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  2. உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து வைத்துக் கொள்ளவும்.
  3. பிறகு,ஊற வைத்த ஜவ்வரிசியுடன் அரைத்த பட்டாணி, மசித்த உருளைக் கிழங்கு, துருவிய இஞ்சி, கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பொடியாக அரிந்த வெங்காயம், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து தோசை ஊற்றுங்கள்.
  4. சூடாகச் சாப்பிட்டால் சுவை அபாரமாக இருக்கும்