Summary: மெது வடை அல்லது உளுந்து வடை என்பது தென்னிந்திய உணவாகும். இது வட்டமாக நடுவில் எளிதாக வேகுவதற்கு ஓட்டையுடன் மொறுகளாக வெளிப்புறமும் மிருதுவான உட்பகுதியும் கொண்டது. புகழ் பெற்ற தென்னிந்திய மற்றும் இலங்கைத் தமிழ் உணவுகளில் ஒன்றான இது, காலை உணவுகளோடு சிற்றுண்டியாகவும் உட்கொள்ளப்படுகிறது. அத்தகைய உளுந்து வடையுடன் உருளைக்கிழங்கையும் சேர்த்து பொரித்தால் மொறு மொறுவென்று சுவையாக இருக்கும். இந்த வடையுடன் தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கும் ஸ்நாக்ஸாக செய்து தரலாம். சரி இதெல்லாம் இருக்கட்டும் இந்த வடையை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம் வாங்க.