ஒரே மாதிரி சாதம் செய்யாமல் அடுத்தமுறை பூண்டு சாதம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!

Summary: பூண்டு சாதம் உடலுக்கு மிகவும் நல்லது குழந்தைகளுக்கு தினமும் லன்ச் என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ ஒரு முறை இந்த ரெசிபியை செஞ்சி கொடுங்க குழந்தைகள் விரும்ம்பி சாப்பிடுவார்கள்.இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணுங்க.

Ingredients:

  • 2 கப் சாதம்
  • 12 பல் பூண்டு
  • 2 வர மிளகாய்
  • 1 ஸ்பூன் தனியா
  • 1 ஸ்பூன் கடலை பருப்பு
  • 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • எண்ணெய்
  • ¼ ஸ்பூன் கடுகு
  • கறிவேப்பிலை
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் கடலை பருப்பு, தனியா, மிளகாய் ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுக்கவும். பிறகு இதனை மிக்சியில் சேர்த்து நன்கு அரைத்து பொடி செய்துகொள்ளவும்.
  2. கடைசில் 4 அல்லது 5 பூண்டு பற்களைப் போட்டு சற்று வதக்கி எடுத்து ஆற விடவும்.
  3. அதே கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதில் மீதமுள்ள பூண்டுப் பற்களையும் போட்டு சிவக்க வதக்கி எடுத்து தனியாக வைக்கவும்.
  4. அதே எண்ணெயில் கடுகு சேர்த்து வெடிக்க ஆரமித்ததும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
  5. பிறகு அதில் சாதம் மற்றும் அரைத்து வைத்துள்ள பொடி, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கிளறி விடவும்.
  6. பிறகு வதக்கி வைத்துள்ள பூண்டையும் சேர்த்து கலந்து விடவும்.
  7. இப்பொழுது சுவையான பூண்டு சாதம் தயார்.