இட்லி, தோசைக்கு ஏற்ற நெல்லை ஸ்பெஷல் கார சட்னி இப்படி ஓரு தரம் செய்து பாருங்க!

Summary: எப்பொழுதும் இட்லி, தோசைக்கு சாம்பார், சட்னி, போன்று செய்து சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? உங்களுக்கு காரசாரமாக சாப்பிடனுனு தோணுதா? அப்போ இந்த கார சாப்பிடனுனு செய்து சாப்பிட்டு பாருங்க அவ்வளவு சுவையாக இருக்கும். இது போன்று கார சட்னி ஹோட்டல்களில் தான் சிலர் ருசித்திருப்பார்கள். வீட்டில் அதே சுவையில் செய்து ருசித்திருக்க மாட்டீர்கள். இப்பொழுது அந்த கவலை வேண்டாம். வீட்டிலேயே சுலபமாக ஹோட்டல் கார சட்னி எப்படி செய்யலாம் என்றுதான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

Ingredients:

  • 2 தக்காளி
  • 15 சின்ன வெங்காயம்
  • 7 பூண்டு
  • 5 மிளகாய் வற்றல்
  • ½ tsp உளுத்தம் பருப்பு
  • ¼ tsp கடலைப்பருப்பு
  • 2 கொத்து கருவேப்பிலை
  • 15 gm கொத்தமல்லி இலை
  • நல்எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 கரண்டி

Steps:

  1. மதுரை கார சட்னி செய்ய முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.பின் மிளகாய்வற்றலை அதில் சேர்க்க வேண்டும்
  2. பின் சின்ன வெங்காயத்தை சேர்த்து பாதி வதங்கியதும் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.நறுக்கிய தக்காளியை அதில் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
  3. கலவை பாதி வதங்கியதும் கருவேப்பிலை, கொத்தமல்லி இலையை அதில் சேர்க்க வேண்டும். பின்னர் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி கொள்ள வேண்டும்.
  4. ஒரு மிக்ஸி ஜாரில் கலவை ஆறியவுடன் சிறிது உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.இப்பொழுது சுவையான மதுரை கார சட்னி தயார்.