ஒரு சட்டி சோறும் காலியாகும் காரைக்குடி செட்டிநாடு சுரக்காய் குழம்பு இப்படி செய்து பாருங்க!

Summary: நம் மக்களிடையே பிரபலமான சமையல் என்றால் செட்டிநாடு சமையல் சொல்லலாம் . இந்த செட்டிநாடு சமையலை பயன்படுத்தி செய்யப்படும் பல உணவுகள் பல நபர்களுக்கு பிடித்த உணவாக இருக்கும். இதில் அசைவ உணவுகள் தான் பெரும்பாலும் அனைவரும் தேர்வு செய்து சமைத்து சாப்பிடுவார்கள். செட்டிநாடு சமையலை பொறுத்தவரையில் சைவ உணவுகளையும் மணக்க மணக்க சமைத்து சாப்பிடலாம். ஆம் இன்று சுரக்காய் வைத்து செட்டிநாடு சுரைக்காய் குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 2 tbsp உப்பு
  • 2 துண்டு பட்டை
  • 3 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • 2 பல் பூண்டு
  • 2 துண்டு இஞ்சி
  • ¾ கப் துருவிய தேங்காய்
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • 2 tbsp மல்லித்தூள்
  • ½ tbsp சீரகத் தூள்
  • 2 ½ tbsp மிளகாய்த் தூள்
  • 1 tbsp கசகசா
  • 1 tbsp சோம்பு
  • 1 tbsp கரம் மசாலா
  • ½ KG சுரைக்காய்
  • 2 tbsp எண்ணெய்
  • ½ tbsp கடுகு
  • கருவேப்பிலை
  • 2 வர மிளகாய்
  • 2 பெரிய வெங்காயம்
  • 3 தக்காளி
  • உப்பு
  • 1 கப் தண்ணீர்
  • கொத்த மல்லி

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 மிக்ஸி

Steps:

  1. முதலில் நாம் வைத்திருக்கும் சுரைக்காயின் தோல் பகுதிகளை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். பின்பு ஒரு பாத்திரத்தில் இந்த சுரைக்காய் போட்டு சுரக்காய் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி இதனுடன் உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளுங்கள்.
  2. பின்பு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள், எண்ணெய் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பூண்டு மற்றும் இஞ்சி போன்ற பொருட்களை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.
  3. பின்பு நாம் துருவி வைத்திருக்கும் தேங்காய் துருவலை கடாயில் சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். பின்பு இதனுடன் சிறிது மஞ்சள் தூள், மல்லி தூள், சீரகத்தூள், மிளகாய் தூள், கசகசா, சோம்பு மற்றும் கரம் மசாலா போன்ற பொருட்களை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  4. பின் பொருட்கள் அனைத்தும் நன்றாக வதங்கியதும். கடாயை இறக்கி குளிர வைத்து அதன் பின் மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் அரை கப் தண்ணீர் ஊற்றி மை போல அரைத்துக் கொள்ளுங்கள்.
  5. அதன் பின் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய்யை ஊற்றிக் கொள்ளுங்கள், எண்ணெய் சூடேறியதும் அதில் கடுகு, கருவேப்பிலை மற்றும் வர மிளகாய் சேர்த்து நன்கு தாளிக்கவும்.
  6. பின்பு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தையும் இதனுடன் சேர்த்து வதக்கவும், வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியையும் சேர்த்துக் கொள்ளவும்.
  7. அதன் பின் தக்காளி மென்மையாக நன்கு மசிந்து வந்ததும், நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து நன்கு கிளறி விடவும். பின் இதனுடன் உப்பு மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாக 7 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  8. குழம்பு நன்றாக கொதித்தவுடன் நம் வேக வைத்து வைத்திருக்கும் சுரைக்காயையும் இதனுடன் சேர்த்து ஒரு ஏழு நிமிடம் நன்றாக கொதிக்க விடவும். அதன் பின் கொத்தமல்லியை சிறிது தூவி கடாயை இறக்கிக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் சுவையான செட்டிநாடு சுரக்காய் குழம்பு தயாராகிவிட்டது.