அடுத்தமுறை நாகர்கோவில் முருங்கைக்காய் சாம்பார் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Summary: ஒரே மாதிரியான சாம்பார் வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான நாகர்கோவில் முருங்கைக்காய் சாம்பார் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 250 gm துவரம்பருப்பு
  • 20 சின்ன வெங்காயம்
  • 1 முருங்கக்காய்
  • 3 தக்காளி
  • 3 பச்சை மிளகாய்
  • 4 காய்ந்தமிளகாய்
  • 10 பல் பூண்டு
  • 2 கத்தரிக்காய்
  • ½ tsp கடுகு
  • ½ tsp சீரகம்
  • ½ tsp உளுந்தபருப்பு
  • 1 tbsp நெய்
  • ½ tsp மிளகாய்த்தூள்
  • ½ tsp மஞ்சள் தூள்
  • ½ tsp சீரகத்தூள்
  • ½ tsp தனியாத் தூள்
  • ¼ tsp பெருங்காயத்தூள்
  • 100 gm புளி
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 2 tpsp எண்ணெய்
  • தேவையான அளவு தண்ணீர்
  • தேவையான அளவு உப்பு

Equipemnts:

  • 1 pressure cooker
  • 1 குழம்பு பாத்திரம்

Steps:

  1. முதலில் பருப்பை அரை மணி நேரத்திற்கு முன்னதாக ஊற வைத்துவிட வேண்டும்.பின் குக்கரில் போட்டு 3 விசில் வரும்வரை வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
  2. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சின்ன வெங்காயம் போட்டு பொன்னிறமாக மாறும் வரை வதக்க வேண்டும்.
  3. பின்னர் அனைத்து தூள் வகைகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். வதக்கி முடித்ததும் முருங்கைக்காயை சேர்த்து கிளற வேண்டும்.
  4. காய்களை வேக வைக்க, அவை மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றுங்கள். நன்கு பச்சை வாசனை போகும் அளவுக்கு கொதிக்க வைக்க வேண்டும்.
  5. பிறகு வேக வைத்த பருப்பை கரண்டியால் கடைந்துவிட வேண்டும். பின்னர் பருப்பை காய்கறி கலவையுடன் சேர்க்க வேண்டும்.
  6. பிறகு ஊற வைத்த புளி தண்ணீரை ஊற்ற வேண்டும். உப்பு போட வேண்டும்.மற்றொரு கடாய் வைத்து எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
  7. பிறகு கருவேப்பிலை, கொத்தமல்லி, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் அதை பருப்பு கலவையில் போட வேண்டும்.
  8. சாம்பார் ரில் நெய் சேர்த்து, கொத்தமல்லி தழை தூவி விடுங்கள். இப்போது சுவையான கேரளா முருங்கைக்காய் சாம்பார் ரெடி!