காரசாரமான குடைமிளகாய் இறால் ஃப்ரை இப்படி செய்து பாருங்க மீண்டும் மீண்டும் சாப்பிட தோண்டும்!

Summary: இறால் வைத்து குழம்பு, வறுவல், இறால் 65, இறால் தொக்கு என பல உணவுகளை செய்து கொடுக்கலாம். இறால்பிரியர்களுக்கு கேப்சிகம் இறால் ஃப்ரை ரொம்பவும் சுலபமாக செய்யக்கூடிய இந்த இறால் வறுவல்சுவையாக இருக்கும். கேப்சிகம் இறால் ஃப்ரை வீட்டில் உள்ளவர்க்கு செய்து கூடுதல் அனைவரும்பாராட்டி தள்ளிவிடுவார்கள்.அந்த அளவிற்கு இறால் வறுவல் சுவையாக இருக்கும். இந்த பதிவில்இறால் வறுவல் எப்படி சமைப்பது என்று பார்ப்போம் வாருங்கள்.

Ingredients:

  • 25 இறால்
  • 1 கேப்ஸிகம்
  • 1 வெங்காயம்
  • 2 மேசைக்கரண்டி எண்ணெய்
  • 2 மேசைக்கரண்டி வெள்ளை நல்ல மிளகு
  • 1 எலுமிச்சை
  • 1 1/2 தேக்கரண்டி ஒன்றிரண்டாக அரைத்த மிளகாய்
  • 1 மேசைக்கரண்டி சோயா சாஸ்
  • உப்பு
  • 3 பூண்டு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. இறாலை சுத்தப்படுத்தி அதனுடன் வெள்ளை மிளகு, எலுமிச்சை சாறு ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பூண்டைநசுக்கி வைத்துக் கொள்ளவும்.
  2. வெங்காயம் மற்றும் குடைமிளகாயை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  3. பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், நசுக்கிய பூண்டு மற்றும் கேப்ஸிகம் போட்டு வதக்கவும்,
  4. பாதி வதங்கியவுடன் அஜினோமோட்டோ உப்பு, சாஸ், மிளகாய் தூள், உப்பு போட்டு இறாலையும் சேர்க்கவும்.
  5. இறால் வெந்தவுடன் இறக்கி வைக்கவும். சுவையான கேப்சிகம் இறால் ஃப்ரை ரெடி.