மாலை நேரம் ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மக்காச் சோள பணியாரம், ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!

Summary: நமது பிள்ளைகளுக்கு பாரம்பரிய உணவுகளையும் சமைத்து கொடுக்க வேண்டும். இன்றைய தலைமுறையினர் பலவித ஃபாஸ்ட்ஃபுட் உணவுகளை விருப்பமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவற்றின் மூலம்பலவித நோய்களும் ஏற்படுகிறது. எனவே இவ்வாறு அவர்கள் சாப்பிடும் உணவுகளை அதிகப்படுத்தாமல்,முடிந்தவரை பெற்றோர்கள் அவற்றை குறைத்துக் கொண்டே வரவேண்டும். எனவே வீட்டில் அவர்களுக்குசுவையான உணவுகளை செய்து கொடுத்துப் பழகுங்கள். அவ்வாறு மிகவும் எளிமையாகவும், ஆரோக்கியமாகவும்,சுவை மிகுந்ததாகவும் செய்யக்கூடிய உணவு வகைகளில் ஒன்றுதான் இந்த குழிப்பணியாரம். இதனைமக்காச்சோளம் சேர்த்து இப்படி ஆரோக்கியமான உணவாக செய்து கொடுத்துப் பாருங்கள். நிச்சயம்குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள். வாங்க அந்த மக்காச்சோளம் வைத்து செய்யப்படும் பணியாரத்தை பற்றி இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

Ingredients:

  • 1/4 கிலோ மக்காச்சோளம்
  • 1 கப் உளுத்தம் பருப்பு
  • 1 டீஸ்பூன் வெந்தயம்
  • உப்பு
  • எண்ணெய்
  • 1 தக்காளி
  • 2 காய்ந்த மிளகாய்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் வெங்காயம்

Equipemnts:

  • 1 குழிபணியார கல்

Steps:

  1. மக்காச்சோளத்தைச் சுத்தம் செய்து, தண்ணீர் ஊற்றி 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.உளுந்தையும் சுத்தம் செய்து வெந்தயம் சேர்த்து ஊற வைக்க வேண்டும்.
  2. வழக்கமாக அரைப்பது போல் உளுந்தை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.. மக்காச்சோளத்தை சற்று கொரகொரப்பாக அரைத்து எடுக்க வேண்டும்.
  3. அரைத்தஉளுந்து மாவுடன் மக்காச்சோள மாவைச் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும், அத்துடன் உப்பு சேர்த்து கலந்து 8 மணி நேரம் வரை புளிக்கவிட வேண்டும். மறுநாள் மாவு புளித்து தயாராக இருக்கும்.
  4. அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்து, மக்காச்சோள பணியார மாவுடன் கலந்து கொள்ள வேண்டும். அடுப்பில் குழிப்பணியாரக் கல்லை வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் மாவை பணியாரங்களாக ஊற்ற வேண்டும்.
  5. ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறத்தையும் வேகவிட்டு எடுக்க வேண்டும். சுவையான மசாலா சேர்த்த மக்காச் சோள பணியாரம் தயார்.