அடுத்தமுறை தோசை இப்படி செய்யுங்க ருசியான அழகர் கோவில் தோசை! சைடிஸ் கூட தேவையில்லை!

Summary: அழகர் கோவில் தோசை – பச்சை அரிசி மற்றும் உளுந்து பருப்புடன் தயாரிக்கப்படும் ஒரு பிரபலமான சுவையானக்ரீப்/தோசை. இந்த தோசை விஷ்ணு/அழகருக்கு பிரசாதமாக வழங்கப்படுவதால் அழகர் கோவில் தோசைஎன்று பெயர். அழகர் கோயில். சண்டை போட்டுப் பிரிந்தவர்கள் அழகர்கோவிலுக்கு வந்து, அங்கேமட்டுமே பிரத்யேகமாகக் கிடைக்கும் அழகர் தோசையை வாங்கிச் சாப்பிட்டால், பங்காளிச் சண்டை,மாமன்-மச்சான் சண்டை, கிராமங்களுக்கு இடையிலான சண்டை, நண்பர்களுடனான சண்டை அனைத்தும்தீர்ந்து, அன்பும் உறவும் பலம் பெறுவதாக மதுரை சுற்றுவட்டார கிராம மக்களிடம் ஒரு நம்பிக்கைஇன்றும் நிலவுகிறது. இந்த அழகர் கோவில் தோசையின் விரிவான செய்முறையை பார்ப்போம்.

Ingredients:

  • 3 கப் கருப்பு உளுந்து சேர்த்து அரைத்த புளிக்காத தோசை மாவு
  • 1/2 கப் தயிர்
  • 1/2 தேக்கரண்டி சுக்கு பொடி
  • உப்பு
  • 2 பச்சைமிளகாய்
  • சிறு துண்டு இஞ்சி
  • 1 தேக்கரண்டி மிளகு
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • கடலை பருப்பு
  • உளுந்து
  • பெருங்காயம்
  • கறிவேப்பிலை
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தோசை மாவுடன் தயிர், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்
  2. பேனில் எண்ணெய் ஊற்றி சீரகம், இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கடலைபருப்பு, உளுந்து சேர்த்து தாளிக்கவும்.கடைசியாக பொடித்த மிளகு சேர்க்கவும்
  3. தாளித்தவற்றை மாவில் சேர்த்து கலக்கவும் தோசைக்கல் காய்ந்தததும் மாவை ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி வெந்ததும் எடுக்கவும்.
  4. சூடாக பரிமாறவும்.சுவையான அழகர் தோசை ரெடி.