நாவில் எச்சி ஊறும் மரவள்ளிக்கிழங்கு மசால் வடை செய்வது எப்படி ?

Summary: சிப்ஸை விட்டா அதுல வேறென்ன செய்றது என தெரியாதவர்களுக்கு இந்த வடை செய்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும். கிழங்குகளில் அதிகம் கவனம் பெறாத அதே நேரம் அதிக சுவையான கிழங்கு மரவள்ளிக்கிழங்குதான்.குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ் ஆகா செய்து கொடுங்கள் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். மரவள்ளிக்கிழங்குயில் இருக்கும் நார்ச்சத்து, குடல் ஆரோகியதை மேம்படுத்த உதவுகிறது.அது மட்டும் அல்லாமல் கண் பார்வை பிரச்னை பெரியவர்களுக்குமட்டும் அல்லாமல் பள்ளி குழந்தைகளுக்கும் கூட எதிர்கொண்ண்டு வருகிறது.

Ingredients:

  • மரவள்ளிக்கிழங்கு
  • 200 கிராம் ஊறவைத்த கடலைப்பருப்பு
  • பச்சரிசி மாவு
  • இஞ்சி
  • 10 பல் பூண்டு
  • 1 டேபிள் ஸ்பூன் சோம்பு
  • பட்டை
  • 2 கிராம்பு
  • 4 பச்சை மிளகாய்
  • 4 காய்ந்த மிளகாய்
  • புதினா
  • 100 கிராம் வெங்காயம்
  • உப்பு
  • 500 மில்லி எண்ணெய்

Steps:

  1. மரவள்ளிக்கிழங்கைத் தோல் சீவி துருவி எடுத்துக் கொள்ளவும். ஊறவைத்த பருப்புடன் இஞ்சி, பூண்டு, சோம்பு, பட்டை, கிராம்பு, பச்சைமிளகாய், காய்ந்தமிளகாய், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்சியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  2. பின்பு அதில் துருவிய மரவள்ளிக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், புதினா, அரிசி மாவு சேர்த்துப் பிசையவும்.
  3. பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் மாவை சிறு சிறு வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
  4. இப்பொழுது சுவையான மரவள்ளிக்கிழங்கு வடை தயார். இந்த வடையை தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.