அடுத்தமுறை பீட்ரூட் பொரியல் செய்ய நினைத்தால் கேரளா ஸ்டைல்ல இப்படி செய்து பாருங்கள்!

Summary: வழக்கமான மதியம் குழம்பிற்கு ,பொரியல் வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பீட்ரூட் பொரியல் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 2 பீட்ரூட்
  • 1 பச்சை மிளகாய்
  • ½ tsp மஞ்சள் துள்
  • ½ tsp கடுகு
  • ¾ tsp உளுந்த பருப்பு
  • 1 tbsp துருவிய தேங்காய்
  • உப்பு
  • 2 tbsp எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 2 பவுள்

Steps:

  1. முதலில் பீட்ரூட்டை தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும் கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
  2. பின்னர் அடுப்பில் கடாயை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்க்க வேண்டும்.
  3. பின்னர் நறுக்கிய பீட்ரூட்டை வெங்காயத்துடன் சேர்த்து வதக்க வேண்டும். பீட்ரூட் சிறிதளவு வதங்கியவுடன் மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும்.
  4. பின்னர் அதில் 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். தண்ணீர் வற்றிய உடன் பீட்ரூட்டில் தேங்காய் துருவலை சேர்க்க வேண்டும்.
  5. பின்னர் இரண்டு நிமிடம் வதக்கி கொள்ள வேண்டும். பின்னர் தயார் ஆன பீட்ரூட் பொரியலை ஒரு பாத்திரத்தில் இறக்கி பரிமாறவும், சுவையான பீட்ரூட் பொரியல் தயார்