அடுத்தமுறை மீன் வாங்கினால் கமகமனு ஃபிஷ் டிக்கா மசாலா இப்படி ஒருமுறை செய்து பாருங்க

Summary: அசைவ வகைகளில் மீன் குழம்பு மீன் வறுவலுக்கு என தனியாக ஒரு கூட்டமே இருக்கும். அசைவத்தில் மற்ற வகைகளைவிட மீனுக்கென தனியாக ஒரு சுவை உண்டு. இந்த மீனை பொறுத்த வரையில் குழம்பு வைப்பதாகஇருந்தாலும் சரி பொறிப்பதாக இருந்தாலும் அதற்கான பக்குவத்தில் தான் செய்ய வேண்டும்.அப்படி மீனை பக்குவமாக அதே நேரத்தில் மசாலா சேர்த்து ஃபிஷ் டிக்கா மசாலா செய்யப்போகின்றோம்.வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே உடனடியாக செய்து அசத்தக்கூடிய இந்த வித்தியாசமானஃபிஷ் டிக்கா மசாலா எப்படி சுலபமாக செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம்இனி பார்க்க இருக்கிறோம்.

Ingredients:

  • 12 துண்டுகள் மீன்
  • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 3 டீஸ்பூன் மிளகாய்த் தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் சீரகத் தூள்
  • 1/2 டீஸ்பூன் தனியாத் தூள்
  • 1/2 டீஸ்பூன் மிளகுத் தூள்
  • 1/2 டீஸ்பூன் தந்தூரி மசாலாபவுடர்
  • எண்ணெய்
  • உப்பு
  • 2 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு
  • 1 வெங்காயம்
  • 2 கிராம்பு
  • 1 துண்டு பட்டை
  • 2 ஏலக்காய்
  • 20 கிராம் முந்திரி
  • 1 தக்காளி
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டேபிள்ஸ்பூன் காய்ந்த வெந்தய இலை
  • 1 டீஸ்பூன் வெண்ணெய்
  • 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  • கொத்தமல்லி

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. ஒரு பாத்திரத்தில் மீன் துண்டுகளை போட்டு அதனுடன், பாதியளவு இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள். தனியாத்தூள், மிளகுத்தூள், தந்தூரி மசாலா பவுடர், உப்பு, எலுமிச்சைச்சாறுசேர்த்து நன்கு பிரட்டி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் ஊற வைத்த மீன் துண்டுகளை போட்டு பொரித்தெடுத்து தனியே வைக்கவும்.
  3. மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டுதாளித்த பின்னர் வெங்காயம், முந்திரி, தக்காளி அனைத்தையும் சேர்த்து வதக்கி, ஆறியதும்மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  4. மற்றொரு கடாயில் வெண்ணெய் சேர்த்து மீதியுள்ள இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். அடுத்து அதில்அரைத்த வெங்காயம், தக்காளி மசாலாவை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  5. அதில் மீதியுள்ள மிளகாய்த்தூள். மஞ்சள் தூள், சீரகத்தூள், தனியாத்தூள் சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர்சேர்த்து ஒரு கொதி வந்ததும், பொரித்த மீன் துண்டுகளை சேர்த்து, காய்ந்த வெந்தய இலையைசேர்த்து கொதிக்க விடவும்.
  6. தண்ணீர் எல்லாம் வற்றி திக்கான பதம் வந்ததும் கொத்தமல்லித்தழையை தூவி அலங்கரித்து பரிமாறவும். சூப்பரானசைடிஷ் ஃபிஷ் டிக்கா மசாலா ரெடி