மதிய உணவுக்கு ருசியான பீர்க்கங்காய் பால் கூட்டு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Summary: நீர் சத்துள்ள காய்கறிகளை அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டும். உடலில் நீர் சத்து குறையும் பொழுது அதை ஈடு செய்யும் வகையில் இது துணையாகஇருக்கும். அந்த வகையில் நீர்ச்சத்து நிறைந்துள்ள பீர்க்கங்காயில் ஏராளமான நன்மைகள்ஒளிந்து கொண்டுள்ளன. குறிப்பாக சருமத்தை பளபளக்க செய்வதில் இதன் பங்கு அதிகம். மேலும்எடை இழப்பு, ரத்த சோகை ரத்த சர்க்கரை அளவு, நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றுக்கு பீர்க்கங்காய்நல்ல ஒரு காய்கறியாக இருக்கிறது. அப்படிப்பட்ட இந்த பீர்க்கங்காய் பால் கூட்டு எப்படிசுவையாக வைப்பது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி தொடர்ந்துநாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

Ingredients:

  • 1 பீர்க்கங்காய்
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 2 பல் பூண்டு
  • 2 பச்சை மிளகாய்
  • 1/4 கப் முதல் தேங்காய் பால்
  • 1/4 கப் இரண்டாம் தேங்காய் பால்
  • கடுகு
  • சீரகம்
  • காய்ந்த மிளகாய்
  • கறிவேப்பிலை
  • எண்ணெய்
  • உப்பு
  • கொத்தமல்லி

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. பீர்க்கங்காயை தோல் நீக்கி நறுக்கிக் கொள்ளவும்.
  2. வெங்காயம்,தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
  3. தேங்காய் பால் எடுத்து வைக்கவும்.
  4. இரண்டாம் தேங்காய் பாலுடன் பீர்க்கங்காய், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு சேர்த்துவேக வைக்கவும்.
  5. நன்கு சுண்டி,வெந்து வந்ததும், முதல் தேங்காய் பால், உப்பு சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும். .(கொஞ்சம் கெட்டியாக வேண்டுமெனில் அரிசி மாவை தண்ணீரில் கலந்து சேர்க்கவும்)
  6. எண்ணெயில் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.
  7. கொத்தமல்லி தூவி பரிமாறவும்