இனி சப்பாத்தி வேண்டம் அதற்கு பதில் ஃபுல்கா ஒருமுறை இப்படி செய்து பாருங்கள்!

Summary: இரவு உணவிற்காக சற்று கூடுதல் நேரம் எடுத்தும் கூட சுவையான உணவினை சமைத்து கொடுக்க பலராலும் முடியும்.எனவே சற்று யோசித்து வித்தியாசமாக என்ன செய்து கொடுக்கலாம் என்று பலரும் சிந்தித்துசமைப்பது உண்டு. அந்த வகையில் உடலுக்கு ஆரோக்கியமாகவும், சாப்பிட சுவையாகவும் இருக்கும்       ஃபுல்கா மிகவும் அருமையாக இருக்கும். கோதுமைமாவை வைதது நாம் எப்போதும் பூரி அல்லது சப்பாத்தியை தான் அதிகமாக செய்வோம். ஏதாவதுகொஞ்சம் வித்தியாசமாக செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் இந்த புல்காவை முயற்சி செய்துபாருங்கள். இது மிகவும் ருசியாக இருப்பதுடன் குழந்தைகளுக்கு நல்ல ஒரு ஹெல்தியான லஞ்ச்பாக்ஸ் ரெசிபி ஆகவும் இருக்கும். வாங்க இப்போது இந்த ஹெல்த்தி புல்கா எப்படி செய்வதுஎன்று தெரிந்து கொள்ளலாம்.

Ingredients:

  • 2 கப் கோதுமைமாவு
  • தண்ணீர்
  • உப்பு
  • 2 டீஸ்பூன் எண்ணெய்

Equipemnts:

  • 1 தோசை கல்

Steps:

  1. கோதுமை மாவுடன் உப்பு, நீர் விட்டு பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவினை ஒரு மணிநேரம் ஈரத்துணி கொண்டு மூடி வைக்கவும்.
  2. 1 மணி நேரம் கழித்து மாவினை எடுத்து சிறு உருண்டைகளாக உருட்டி மெல்லிய சப்பாத்திகளாகத் தேய்க்கவும். சப்பாத்தி மாவை மெல்லியதாக தேய்க்க வேண்டும்.
  3. அடுப்பில் தோசைக் கல்லை வைத்து எண்ணெய் விடாமல் சப்பாத்தியைப் போட்டு, லேசாக காய்ந்ததும் ஒரு இருக்கி கொண்டு எடுத்து தணலில் நேரடியாகக் காட்டி வேக விடவும்.
  4. சப்பாத்தி வெந்து பூரி போல் உப்பி வரும். இருபுறமும் வேக வைத்து எடுக்கவும். சப்பாத்தி கருகாத அளவு பார்த்துக் கொள்ள வேண்டும்.
  5. சூப்பரான புல்கா ரெடி!.