நாவில் எச்சி ஊற வைக்கும் கத்தரிக்காய் மிளகு கறி ஒரு தரம் இப்படி செய்து பாருங்க!

Summary: ஒரு சிலருக்கு கத்தரிக்காய் என்றால் அதிகம் பிடித்தமான காய்கறியாக இருக்கும். ஒரு சிலருக்கு கத்தரிக்காய் என்றாலே அலர்ஜியாக இருக்கும்.கத்தரிக்காயை ஒருவிதமான ஒவ்வாமை உடையவர்கள் சாப்பிட்டால் நமச்சல் ஏற்படும் என்று தவிர்த்துவிடுவார்கள். ஆனால் கத்தரிக்காய் பிரியர்களுக்கு எவ்வளவு செய்து கொடுத்தாலும் பத்தவேபத்தாது. அத்தகையவர்களுக்கு இந்த கத்தரிக்காய் மிளகு கறி ஒரு முறை  செய்து கொடுத்துப் பாருங்கள்! உங்களை பாராட்டி தள்ளிவிடுவார்கள். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதைஇந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்..

Ingredients:

  • 1/2 கப் கத்தரிக்காய்
  • 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்
  • 1 வெங்காயம்
  • உப்பு
  • 2 பல் பூண்டு
  • மஞ்சள்தூள்
  • 1/2 டம்ளர் தேங்காய்பால்
  • கறிவேப்பிலை
  • 3 பல் பூண்டு
  • 1 1/2 டீஸ்பூன் மிளகு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் அரைக்க கொடுத்துள்ள அனைத்தையும் விழுதாக அரைத்து கொள்ளவும்
  2. கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், உப்பு, மஞ்சள் தூள், பூண்டு, கத்தரிக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  3. பின்,அரைத்த விழுது சேர்த்து கிளறி சிம்மில் வைத்து எட்டு நிமிடங்களுக்கு நன்றாக வேகவிடவும்
  4. பிறகு தேங்காய் பால் சேர்த்து மூன்று நிமிடம் கழித்து கிரேவி பதம் வந்ததும் கறிவேப்பிலை போட்டு இறக்கவும்