அடுத்தமுறை கத்தரிக்காய் வைத்து கூட்டு செய்தால் மசாலா கூட்டு இப்படி செய்து பாருங்க!

Summary: நாம் பெரும்பாலும் கத்திரிக்காயை வைத்து சட்னி, பொரியல், குழம்பு, அவியல் என பல வகையான கூட்டுகள் மற்றும் ரெசிபிகள் நாம் செய்வோம் ஆனால் எப்பொழுதும் ஒரே மாதிரியாக செய்வதற்கு பதில் நீங்கள் இப்படி ஒரு தரம் இந்த சுவையான கத்திரிக்காய் மசாலா செய்து பாருங்கள் அற்புதமான ருசியில் இருக்கும் உங்கள் வீட்டில் உள்ளவர்களும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஏன் அடுத்த முறையும் கத்திரிக்காயை இதேபோல செய்ய சொல்லி கேட்பார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும்.

Ingredients:

  • 1 கப் வேர் கடலை
  • 1 tsp தனியா
  • 1 tsp மிளகு
  • 1 tsp சீரகம்
  • 1/4 tsp வெந்தயம்
  • 2 பட்டை
  • 5 கிராம்பு
  • 10 வர மிளகாய்
  • 3 tsp துருவிய தேங்காய்
  • 1 tsp எள்ளு
  • 1 tsp கசகசா
  • 1/4 tsp மஞ்சள் தூள்
  • உப்பு
  • 5 கத்திரிக்காய்
  • நல்லெண்ணய்
  • 1 tsp கடுகு
  • 1 tsp சீரகம்
  • கருவேப்பிலை
  • 2 tsp புளி கரைசல்
  • 1 tsp வெள்ளம்
  • மல்லி இலை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் வானொலியில் வேர் கடலையை வறுத்து எடுத்து கொள்ளவும்.இப்போ எடுத்து வைத்திருந்த தனியா, மிளகு, சீரகம், வெந்தயம், பட்டை, கிராம்பு, வர மிளகாய் சேர்த்து நன்கு வறுக்கவும், அதோடு துருவிய தேங்காயை சேர்த்து வறுத்துட்டு எடுத்து வச்சிக்கோங்க.
  2. அடுத்ததாக எள்ளு, கசகசா சேர்த்து வறுக்கவும். இப்போ வறுத்த எல்லாம் ஆறுன பிறகு அப்படியே ஒரு ஜாருக்கு மாத்திட்டு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நல்லா அரைத்து எடுக்கவும்.
  3. இப்போ கத்திரிக்காயை நல்லா அலசிட்டு நாலு பிரிவா வெடிக்கோங்க. ஒவ்வொரு துண்டாக வெட்ட கூடாது. வெள்ளரிக்காயை எப்படி வெட்டி மிளகாய் பொடி, உப்பு சேர்ப்போமே, அதே போல் கத்திரிக்காயை வெட்டி அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்க்கவும்.
  4. ஒரு இரண்டு தேக்கரண்டி அளவு மசாலாவை தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். இப்போ வானொலியில் நல்லெண்ணெய் சேர்த்து, எண்ணெய் சூடானதும் கடுகு, சீரகம், கருவேப்பிலை சேர்த்து பொறிய விடவும்.
  5. அதோடு மசாலா சேர்த்து வைத்துள்ள கத்திரிக்காயை எடுத்து அப்படியே எண்ணெயில் சேர்த்துக்கோங்க. நடுத்தர சூடு இருந்தால் போதுமானது. அப்படியே கத்திரிக்காயை எண்ணெயில் திருப்பி விட்டு ஒரு ஐந்து நிமிடம் வேக வைக்கவும். இப்போ எடுத்து வைத்த மசாலாவை சேர்த்துட்டு அதோடு கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக்கோங்க.
  6. ஒரு பத்து நிமிடம் மூடி வைத்து வேக விடவும். கடைசியா புளி கரைசல், வெள்ளம் சேர்த்து விட்டு நன்கு கொதிக்க வீட்டு, பொடியாக நறுக்கி வைத்துள்ள மல்லி இலைகளை தூவி விட்டு பரிமாறி பாருங்க. கண்டிப்பா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் நண்பர்களே.