இட்லி ,தோசை சாதம்,சப்பாத்திக்கு அருமையான பாலக் கீரை தால் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!

Summary: பாலக்கீரையில் வைட்டமின் A அதிக அளவில் உள்ளதால் மாலைக்கண் மற்றும் கண்களில் அரிப்பு ஏற்படுதல் போன்றவற்றைவராமல் தடுக்க உதவுகிறது. இந்த பாலக் கீரை தால். சுலபமாக நிறைய பொருட்களை எல்லாம் போடாமல்,கொஞ்சம் பொருட்களை மட்டும் போட்டு அஞ்சு நிமிஷத்துல செய்து விடலாம். அவ்வளவு அருமையாகஇருக்கும் சாப்பிடுவதற்கு! இந்த கீரை தாள் சூடான சாப்பாட்டிற்கு மட்டும் இல்லை, சப்பாத்தி, இட்லி ,தோசைக்கும் அருமையான இருக்கும். வாங்க நேரத்தை கடத்தாமல் அந்த பாலக் கீரைதால் எப்படி செய்வது என்று நாமும் தெரிந்து கொள்வோம்.

Ingredients:

  • பாலக்கீரை
  • பாசிப்பருப்பு
  • தக்காளி
  • பச்சை மிளகாய்
  • வெங்காயம்
  • கடுகு.
  • உளுத்தம்பருப்பு
  • பெருங்காயத்தூள்
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. தக்காளி,வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பாலக்கீரையை நன்றாக சுத்தம் செய்துபொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பாலக்கீரையை போட்டு வதக்கி ஆறவைத்து மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும். பாசிப்பருப்பை வேக வைத்து கீரையுடன் சேர்க்கவும்.
  3. வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு.. கடுகு, நறுக்கிய பச்சை மிளகாய், உளுத்தம்பருப்பு போட்டு தாளித்த பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.
  4. இரண்டும் நன்றாக வதங்கியதும் இதனுடன் கீரை – பருப்பு கலவை, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
  5. அடுத்து அதில் பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கவும். பாலக்கீரை தால் ரெடி இது சப்பாத்திக்கு சூப்பர் சைட் டிஷ். சாதத்துடன் கலந்தும் சாப்பிடலாம்.