இனி தக்காளி பிரியாணி செய்ய நினைத்தால் இனி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Summary: பிரியாணி என்றதுமே எல்லோருக்கும் முதலில் ஞாபகத்திற்கு வருவது அசைவ பிரியாணி. அது என்னவோ எத்தனைவகை சைவ பிரியாணிகள் இருந்தாலும், இந்த அசைவ பிரியாணி எனும் போது அதன் ருசியும் மணமும் தனி தான். சைவத்தில் அந்த பிரியாணியைசெய்தாலும் அந்த ருசி இருக்காது. இதற்கு அவர்கள் சேர்க்கும் அசைவ உணவு  தான் முக்கிய காரணம். தக்காளி செய்து பிரியாணி செய்தல்அசைவம் சாப்பிடாத நாளில் இந்த தக்காளி பிரியாணி அசைவ சுவையை ஓரளவுக்கு திருப்தி அளிக்கும். இந்த சமையல் குறிப்பு பதிவில் தக்காளி சாதத்தை பிரியாணி போலவே எப்படி செய்வது என்பதை தான் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

Ingredients:

  • 6 பழுத்த தக்காளி
  • 1/2 கிலோ பாசுமதி அரிசி
  • 1/4 டேபிள் ஸ்பூன் நெய்
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா
  • 2 பட்டை
  • 2 கிராம்பு
  • 1 ஏலக்காய்
  • 2 அன்னாசிப்பூ
  • 1 பிரியாணி இலை
  • 3 பச்சை மிளகாய்
  • 2 பெரிய வெங்காயம்
  • 4 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • கொத்தமல்லி
  • நறுக்கிய புதினா
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் அரிசியை நீரில் ஊற வைத்து, 1 முறை மட்டும் நீரில் கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  2. பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய்,அன்னாசிப்பூ மற்றும் கசக்கிய பிரியாணி இவை ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
  3. பின் அதில் வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட்,முழு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும் அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கி,அதோடு சிறிது உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விடவேண்டும்.
  4. தக்காளியானது நன்கு மென்மையாக வதங்கியதும், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அதோடு நறுக்கிய கொத்தமல்லிமற்றும் புதினா சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
  5. பின்பு அதில் அரிசியை சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கினால்,தக்காளி பிரியாணி ரெடி!!!.