காரசாரமான சுவையான பன்னீர் கபாப் செய்வது எப்படி ?

Summary: இந்த கபாபை மசாலா பொருட்கள் சேர்த்து செய்வதினால் காரசாரமான சுவையில் அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள், ஏன் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இதை விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு இதன் சுவை தாறுமாறாக இருக்கும். அதற்கு மேல் உங்கள் வீட்டிற்கு விருந்தாளிகள் யாராவது வருகிறார்கள் ஏன்றால் அவர்களுக்கு இந்த பன்னீர் கபாப் செய்து கொடுத்தால் மிக விரும்பி சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 1 கப் வால் நட்
  • 200 கிராம் பன்னீர்
  • 3 பல் பூண்டு
  • 1 துண்டு இஞ்சி
  • ½ tbsp உப்பு
  • 1 tbsp சீரகத்தூள்
  • 1 tbsp காஷ்மீர் மிளகாய் தூள்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 tbsp சாட் மசாலா
  • 1 tbsp தனியா தூள்
  • ½ tbsp கரம் மசாலா
  • 1 tbsp காய்ந்த மாங்காய் தூள்
  • 1 கைப்பிடி கொத்தமல்லி
  • புதினா இலை
  • 5 tbsp நெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் கடாயை அடுப்பில் வைத்து பின் நாம் எடுத்திருக்கும் ஒரு கப் அளவிலான வால்நட்டை கடாயில் சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளவும், வால்நட் பொன்னிறமாக வரும் வரை வறுத்து மிக்ஸி ஜார் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  2. இரண்டு முறை கொரகொரவனே அரைத்து விட்டு மேலும் மிக்ஸி ஜாரில் நாம் எடுத்து வைத்துள்ள 200 கிராம் பன்னீர், மூன்று பற்கள் பூண்டு, ஒரு சிறிய துண்டு இஞ்சி, அரை டீஸ்பூன் உப்பு, அரை டீஸ்பூன் சீரகம், ஒரு டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய், இரண்டு பச்சை மிளகாய் நறுக்கியது, ஒரு டீஸ்பூன் சாட் மசாலா ஒரு டீஸ்பூன் தனியாத்தூள்.
  3. அரை டீஸ்பூன் கரம் மசாலா, ஒரு டீஸ்பூன் காய்ந்த மாங்காய் தூள், ஒரு கை பிடி கொத்தமல்லி, சிறிது புதினா இலை சேர்த்து நன்கு கொரகொரவென அரைத்து கொள்ளுங்கள். பின் அனைத்து பொருட்களும் நன்கு அரைபட்டதும் கையில் எடுத்து உருண்டை பிடிக்கும் பதத்திற்கு வர வேண்டும்.
  4. அதன் பிறகு மிக்ஸியில் அரைத்த கபாபை ஒரு உருண்டை கையில் எடுத்து பருப்பு வடை தட்டுவது போல் தட்டி கொள்ளுங்கள். இப்படி மீதம் இருக்கும் மாவையும் தட்டிக் கொள்ளுங்கள்.
  5. பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 5 டீஸ்பூன் அளவு நெய் ஊற்றி கொள்ளவும், நெய் நன்கு உருகி காய்ந்ததும், அதில் நாம் தயார் செய்தார் பன்னீர் கபாபை சேர்த்து பொரித்து கொள்ளுங்கள்.
  6. அவ்வளவுதான் மிகவும் சுவையான பன்னீர் கபாப் தயாராகிவிட்டது. இதை நீங்கள் டொமேட்டோ கெட்சப் உடன் பரிமாறினால் இந்த பன்னீர் கபாப் அற்புதமான சுவையில் இருக்கும்.